லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

வேட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டி

பரம்பரை பரம்பரையாக நெசவுத்தொழில் செய்து வருகிறோம்.

வேட்டிக்குப் பெயர் பெற்றுத் தந்த மதுரை சாரதி!

மிழரின் பண்பாட்டு அடையாளமான வேட்டி, பல்வேறு பிராண்டுகளின் பெயர்களில் வந்துகொண்டிருந்தாலும், பல வண்ணக் கரையோடு தூய வெண்மையில் பிரபலமான வேட்டியை முதன்முதலில் உருவாக்கியது மதுரை சாரதி வேட்டி நிறுவனம்தான். ஆரம்ப காலத்தில் பருத்தி, மல்லு, பாலியஸ்டர், பட்டு வேட்டிகள் என்று அந்தஸ்துக்குத் தகுந்தாற்போல மக்கள் வாங்கினாலும், பருத்தி வேட்டிகள் பலரை ஈர்க்கும் வகையில் இல்லை. அந்த நிலையை மாற்றியதும் சாரதியே.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

”பரம்பரை பரம்பரையாக நெசவுத்தொழில் செய்து வருகிறோம். 1950-களில் எங்கள் தாத்தா சகஸ்ரநாமம் தரமான பருத்தி வேட்டிகளை விற்பனை செய்யத் தொடங்கினார். எந்தக் கலப்பும் இல்லாமல் தரமான கைத்தறி வேட்டிகளை விற்பனை செய்ததால் அந்தக் காலத்திலிருந்தே தமிழகம் முழுவதுமிருந்து சாரதி வேட்டிகளை வாங்கிச்செல்வார்கள். அதன்பின், சாரதி வேட்டியை நூறுக்கு நூறு சதவிகிதம் பருத்தியில் தயாரித்து தூய வெண்மையை அறிமுகப்படுத்தினோம். அதற்குமுன் அப்படியொரு வெண்மையையும் மென்மையையும் யாரும் கொடுக்கவில்லை. அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. எங்கள் வேட்டி மாடலைப் பார்த்துதான் பலரும் அதுபோலவே தயாரிக்க ஆரம்பித்தார்கள். இன்று நாட்டில் எவ்வளவு வேட்டிகள் வந்தாலும் சாரதி வேட்டி என்ற பெயரையே மக்கள் சொல்வது எங்களுக்கு மிகவும் பெருமை.

வேட்டி
வேட்டி

பெரும்பாலும் எங்கள் சொந்த தறியில் நெய்கிறோம். மூலப்பொருள்களை வெளியில் கொடுத்தும் தயாரித்து வாங்குகிறோம். எல்லாத் தரப்பு மக்களும் வாங்க வேண்டுமென்பதற்காக விலை குறைவான விசைத்தறி வேட்டிகளையும் தயாரிக்கிறோம். சுங்குடிச் சேலைகள் மற்றும் பல வகையான துணி வகைகளையும் தயார் செய்கிறோம். எங்களிடம் 250 ரூபாயிலிருந்து 1,250 ரூபாய் வரை வேட்டிகள் கிடைக்கும். அரசியல் கட்சிக்காரர்கள் கரை போட்ட வேட்டிகளுக்காக எங்களிடம்தான் வருகிறார்கள்” என்கிறார் மதுரை சாரதி வேட்டி ஷோரூம் உரிமையாளர் விக்னேஷ்பாபு.

உலகமெங்கும் ஜொலிக்கும் திருபுவனம் பட்டு!

ட்டுப்புடவை என்றாலே அது ஒருவகை பெருமைதான். அதுவும் தரமான ஜரிகைகளுடன், நெருக்கமாக நூல்களை இணைத்து நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தால்... நிச்சயம் புகழப்படுவதற்கு தகுதியானதுதான். அந்த வரிசையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது திருபுவனம் பட்டு!

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் `சாமிநாதன் அண்டு கோ' என்ற பெயரில் 90 ஆண்டுகளாக திருபுவனம் பட்டுச்சேலைக்கான கடை நடத்திவரும் ரெத்தினசாமியிடம் பேசினோம்.

``பொதுவாக பட்டுச் சேலைகள் ஒரு வரிசைக்கு நான்கு நூல்கள் இணைத்து நெய்யப்படுவது வழக்கம். ஆனால், திருபுவனம் பட்டு ஒரு வரிசைக்கு எட்டு இழைகளைச் (நூல்கள்) சேர்த்து நெய்யப்படுகிறது. இதனால் புடவையின் உறுதித்தன்மை அதிகரிப்பதோடு, நீண்டகாலத்துக்கும் உழைக்கிறது. இதனால்தான் திருபுவனம் பட்டு புகழ்பெற்றது. ஒரு புடவை தயார் செய்வதற்கு பத்து நாள்கள் ஆகும். இதற்கு மூன்று பேர் வேலை செய்ய வேண்டும். அரக்கு, மாம்பழம், ஆனந்தா ப்ளூ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நிறங்களில் இங்கு பட்டுப்புடவைகள் கிடைக்கும். 5,000 ரூபாயில் தொடங்கி ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலும் பட்டுப்புடவைகள் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் தனியாகவும் நெய்யப்படுகிறது.

 பட்டு
பட்டு

தமிழக மக்கள் மட்டுமல்ல... அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வசிப்பவர்களும் இங்கிருந்து புடவை வாங்கிச் செல்கின்றனர். தமிழக அரசு பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தனியார் கடைகளில் திருபுவனம் பட்டுச்சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன'' என்கிறார் ரெத்தினசாமி.