Published:Updated:

கொரோனா: பிளாஸ்மா தானம்; அரசு வேலையில் முன்னுரிமை! - அஸ்ஸாம் அரசின் அதிரடி அறிவிப்பு

பிளாஸ்மா தானம்
News
பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலை மற்றும் அரசின் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

Published:Updated:

கொரோனா: பிளாஸ்மா தானம்; அரசு வேலையில் முன்னுரிமை! - அஸ்ஸாம் அரசின் அதிரடி அறிவிப்பு

பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலை மற்றும் அரசின் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

பிளாஸ்மா தானம்
News
பிளாஸ்மா தானம்

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. தேசிய அளவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,35,756 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3,42,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,602 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணைய பக்கப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

சீனாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சில நாடுகள் மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறினாலும் இன்னும் அது அதிகாரபூர்வமாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் அறிகுறிகளைப் பொறுத்து வழங்கப்படும் மருந்துகளைக் கொண்டே கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது இல்லாமல் பிளாஸ்மா தானம் மூலமும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த ஒருவர் உடலில் வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். எனவே, அவர்களின் பிளாஸ்மாவை பிறருக்கு செலுத்துவதன் மூலம் அவரும் விரைவில் வைரஸில் இருந்து குணமடைகிறார். இந்தமுறை பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் இதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து குணமடைந்த அனைத்து மக்களுக்கும் தாங்களாகவே பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என டெல்லி அரசு நீண்ட நாள்களாகவே கோரிக்கை வைத்து வருகிறது.

அஸ்ஸாம் அமைச்சர்
அஸ்ஸாம் அமைச்சர்

அதேபோல் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் இரு நாள்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இவை அனைத்தையும் தாண்டி பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அளித்துள்ள பேட்டியில், “ஒருவருடைய உடலிலிருந்து எடுக்கப்படும் 400 கிராம் பிளாஸ்மா மூலம் இரண்டு பேருக்கு சிகிச்சையளிக்க முடியும்.

பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஒரு சான்றிதழும் சுகாதாரத்துறை சார்பில் ஒரு கடிதமும் வழங்கப்படும். வருங்காலத்தில் அதை வைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் அரசாங்க வேலைகளில் முன்னுரிமை பெறலாம். பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலை நேர்காணலின்போது 2 மார்க் அதிகம் வழங்கப்படும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அசாம் வந்து பிளாஸ்மா தானம் செய்யலாம். அவர்களுக்குத் தேவையான விமான டிக்கெட்டுகள் இலவமாக வழங்கப்படும். மேலும் அவர்கள் அசாமின் விருந்தாளிகளாகக் கவனிக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

இவரின் அறிவிப்பு அஸ்ஸாம் முழுவதும் நல்ல கவனம் பெற்றுள்ளது.