Published:Updated:

மக்களே உஷார்: `ஸ்கூட்டி விழுந்திருக்கு; ஜிஎஸ்டி மட்டும் கட்டுங்க!' - மோசடி கும்பலை சிக்கவைத்த பெண்

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
News
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

கூப்பன் மூலம் பரிசு விழுந்திருப்பதாக இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

மக்களே உஷார்: `ஸ்கூட்டி விழுந்திருக்கு; ஜிஎஸ்டி மட்டும் கட்டுங்க!' - மோசடி கும்பலை சிக்கவைத்த பெண்

கூப்பன் மூலம் பரிசு விழுந்திருப்பதாக இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
News
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

"அக்கா உங்களுக்கு ஸ்கூட்டியும், கோல்டு காயினும் விழுந்திருக்கு. ஆனா, அதை சும்மா கொடுக்கமுடியாது. அதுக்கு ஜி.எஸ்.டி வரி கட்டணும்" என்று நூதன முறையில் ஏமாற்ற முயன்றவர்களை சாதூர்யமாக கையாண்டு போலீஸாரிடம் சிக்க வைத்திருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த பெண்மணி.

அரியலூர்
அரியலூர்

அரியலூர் மாவட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ்லின். இவரது கிராமத்தில் கடந்த வருடம் சோப்பு விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் வந்துள்ளது. ``சோப்பு வாங்கினால் கூப்பன் வழங்கப்படும். கூப்பனில் பரிசுகள் விழுந்தால் 50 சதவிகித தள்ளுபடி விலையில் குக்கர், குத்துவிளக்கு போன்ற பொருள்கள் கொடுப்போம்" என ஆசைவார்த்தை கூறி சோப்புகளை விற்பனை செய்திருக்கிறார்கள்.

சோப்புகளை வாங்கியவர்களிடமிருந்து அவர்களது செல்போன் நம்பரையும் வாங்கிச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் ரோஸ்லினுக்கு ஒரு நம்பரிலிருந்து போன் வந்திருக்கிறது. அதில், தொடர்பு கொண்ட நபர்கள், ``அக்கா எங்களிடம் சோப்பு வாங்கிய உங்களுக்கு ஸ்கூட்டியும், கோல்டு காயினும் விழுந்திருக்கு. ஆனா, அதனை சும்மா கொடுக்கமுடியாது.

மோசடியில் ஈடுபட்டவர்கள்
மோசடியில் ஈடுபட்டவர்கள்

அதற்கான ஜி.எஸ்.டி வரி நீங்கள்தான் கட்டவேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்கள். பதிலுக்கு ரோஸ்லின், ``எவ்வளவு கட்டவேண்டும்" என்று கேட்க, ``14,860 ரூபாயை எங்களுடைய அகௌன்ட் நம்பருக்கு அனுப்புங்கள்" என்று அவர் செல்போன் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதனைடுத்து ரோஸ்லின், ``நீங்கள் யார்... எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என விவரம் கேட்டிருக்கிறார். அதையடுத்து தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

அதில் சந்தேகமடைந்த ரோஸ்லின் பணத்தை அனுப்பவில்லை. மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் பணம் அனுப்பச் சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்கின்றனர். அதையடுத்து ரோஸ்லின், இது குறித்து கீழப்பழுவூர் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் மர்ம நபர்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு அவர்கள் இருப்பிடம் தெரிந்துகொண்டு அந்தக் கும்பலைச் சேர்ந்த 14 பேரைக் கைதுசெய்தனர். விசாரணையில் சண்முகவேல், சின்ன ராமசாமி, மாரியப்பன், குருநாதன், மாடசாமி என்பது தெரியவந்தது. இவர்கள் பல்வேறு இடங்களில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து வழக்கை விசாரித்து வந்த போலீஸாரிடம் பேசினோம். ”இன்றைய சமூகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருவது சைபர் குற்றவாளிகள்தான். அதிகாரிகள் முதல் அப்பாவி மக்கள் வரை சிறுகச் சிறுக கஷ்டப்பட்டுச் சேர்த்து வைக்கும் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். `அதிக வட்டி கொடுக்கிறேன்,

போலீஸார்
போலீஸார்

பரிசுப்பொருள் விழுந்துள்ளது, உங்களது ஏ.டி.எம் கார்டு நம்பரை சொல்லுங்கள்' என்று போனில் யார் பேசினாலும் அவசியம் போலீஸாருக்குத் தகவல் கொடுங்கள். நீங்கள் புகார் கொடுத்தால் மட்டுமே இவர்களை கைதுசெய்யமுடியும். நமக்கு எதற்கு வம்பு என்று நினைத்து ஒதுங்கினால் உங்களை போல் பலரும் ஏமாறுவார்கள்” என்றனர்.