Published:Updated:

தசரா பேரணி; திடீரென 500 ஆண்டுகள் பழைமையான மதரஸாவுக்குள் நுழைந்து பூஜை செய்த இந்து அமைப்புகள்!

மதரஸா படிக்கட்டில் தசரா பேரணியினர்
News
மதரஸா படிக்கட்டில் தசரா பேரணியினர்

கர்நாடகாவில் தசரா பேரணியின்போது திடீரென மதரஸாவுக்குள் நுழைந்து பூஜை செய்தவர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பிடார் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரஸா ஒன்று இருக்கிறது. மெஹ்முத் கவன் என்ற அந்த மதரஸா புராதன சின்னங்களில் ஒன்றாகவும், தேசிய நினைவுச்சின்னமாகவும் இருக்கிறது. தொல்லியல்துறை இதைப் பராமரித்துவருகிறது.

இந்த நிலையில், பிடாரில் இந்து அமைப்புகள் சார்பாக தசரா பேரணி நடத்தப்பட்டது. பேரணி மதரஸா அருகே வந்தபோது திடீரென சிலர் மட்டும் `ஜெய் ஸ்ரீராம்', `இந்து தரம் ஜெய்' என்று கோஷமிட்டவாறு மதரஸாவின் வெளிக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் மதரஸாவின் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு கட்டடத்துக்குள் நுழைய முயன்றது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. உள்ளே நுழைந்தவர்கள் மதரஸா வளாகத்தில் ஓர் ஓரத்தில் நின்று பூஜை செய்தனர். போலீஸார் அவர்களை வெளியில் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். மேலும், அத்துமீறி மதரஸாவுக்குள் நுழைந்ததாக ஒன்பது பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

தசரா பேரணி; திடீரென 500 ஆண்டுகள் பழைமையான மதரஸாவுக்குள் நுழைந்து பூஜை செய்த இந்து அமைப்புகள்!

இந்தச் சம்பவத்துக்கு பிடார் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டன. ``குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லையெனில் தொழுகை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று முஸ்லிம் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.