தமிழக மக்களை மேலும் வாட்டி வதைக்க வந்துவிட்டது, 15 சதவிகித மின்கட்டண உயர்வு. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது.

2011-ல் அரியணை ஏறிய ஜெயலலிதா தலைமையிலான அரசு, அடுத்த ஆண்டே 9,500 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியது. மறுபடியும், 2013-ம் ஆண்டு 1,250 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தியது. இப்போது 15 சதவிகிதம், அதாவது 6,850 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறப்பதற்குக்கூட, 'புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று அறிக்கை வெளியிடும் ஆட்சியாளர்கள், மின் கட்டண உயர்வுக்கும் தாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக்கொள்ள தயங்குகிறார்கள். தங்களுக்கும் மின்கட்டண உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல பாவ்லா செய்கிறார்கள்.

மின் வாரியத்தில் வரவுக்கும் செலவுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை மின் கட்டண உயர்வின் மூலம் சரிக்கட்ட வேண்டும் என்று மின்சாரச் சட்டம் 2003 கூறுகிறது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வரவுசெலவில் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணங்களை உயர்த்த ஆலோசனை வழங்கியது. பொது விசாரணை என்ற பெயரில் நாடகமும் நடத்தப்பட்டது.

மின் கழகத்தின் வரவு செலவில் தொடர்ந்து பற்றாக்குறை நிலவுகிறது. அதற்கு என்ன காரணம்?

அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குகிறார்கள். இந்த ஓட்டை வழியாகத்தான், தமிழ்நாடு மின்வாரியத்தின் வருவாயில் 70 சதவிகிதம் போய்க்கொண்டிருக்கிறது. சந்தையில் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது, குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து ஏன் மின்சாரம் வாங்குகிறார்கள் என்றும் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

''மின் நிலையங்களை அமைப்பதற்கு தனியார் நிறுவனங்கள் மூலதனம் போடுகின்றன. அந்த மூலதனத் தொகையை திருப்பி எடுப்பதற்கு மின்கழகத்திடம் நிலைக்கட்டணம் (Fixed Charges) வசூலிக்கின்றன. தமிழ்நாடு மின் கழகம் நான்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குகின்றது. அந்த நான்கு மின் நிலையங்களை அமைப்பதற்கான மொத்த செலவே ரூ.3,500 கோடிதான் என்று கணக்கு சொல்கிறார்கள். ஆனால், கடந்த 14 ஆண்டுகளில் நிலைக் கட்டணம் என்ற பெயரில் அந்த நான்கு தனியார் நிறுவனங்களுக்கு மின் கழகம் அளித்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.13,000 கோடி. மேலும், இந்த தனியார் நிறுவனங்களுக்கு 2015-ம் ஆண்டு செலுத்த வேண்டிய ரூ. 7,042 கோடியை, தற்போதைய மின் கட்டண உயர்வில் சேர்த்துவிட்டார்கள்.

தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கும் மின் கழகம் நிலைக்கட்டணம் செலுத்துகிறது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசு முதலீடு செய்து, இந்த மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏன் நிலைக்கட்டணம் செலுத்த வேண்டும்? நிலைக்கட்டணம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாயை ஏன் மக்கள் தலையில் சுமத்த வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் விஜயன்.

என்ன கொடுமையென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்ட எண்ணூர் அனல்மின் நிலையம் உட்பட காலாவதியான சில மின் நிலையங்களுக்கும்கூட நிலைக்கட்டணம் செலுத்துகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அந்த மின்நிலையங்களுக்கும் நிலைக்கட்டணம் செலுத்துகிறார்கள். தமிழ்நாடு மின் கழகத்தின் ஆண்டு பற்றாக்குறை ரூ.6,850 கோடி. ஆண்டு ஒன்றுக்கு மின் வாரியம் செலுத்தும் நிலைக் கட்டணம் ரூ.7,600 கோடி. இந்த நிலைக்கட்டணத்தை நிறுத்தினால், வரவு செலவில் பற்றாக்குறை ஏற்படாது. மின் கட்டண உயர்வுக்கும் அவசியம் இருக்காது. நிலைக்கட்டணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசோ, மின் கழகமோ ஏன் இதுவரை எடுக்கவில்லை?

மின் கழகமும் தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

தற்போதைய கட்டண உயர்வால், மின் கழகத்தின் கடன் சுமை குறைந்துவிடுமா? மின் கழகத்தின் பட்ஜெட் பற்றாக்குறை குறையுமா? இந்தக் கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாய், புதிய மின் திட்டங்களுக்கான முதலீடாக மாறுமா? அடுத்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று மக்கள் முதல்வரோ, மாநில முதல்வரோ உறுதி அளிப்பார்களா எனத் தெரியவில்லை!

ஆ.பழனியப்பன்