Published:Updated:

பிரஸ், நூல்கள், பிரசுரங்கள் பதிவு மசோதா 2010

பிரஸ், நூல்கள், பிரசுரங்கள் பதிவு மசோதா 2010

புதுடெல்லி, பிப்ரவரி 10, 2011

பிரஸ் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம் 1867-ஐ திருத்துவது என மத்திய அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளது. ##~~##

பழைய நடைமுறைகளை சீர்திருத்தி, தற்போதைய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக அச்சு ஊடக கொள்கை மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை திருத்தி  புதிய மசோதாவைக் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது.

புதிய மசோதாவின் முக்கிய கூறுகளாவன:

1. இந்தச் சட்டம் பிரஸ் மற்றும் நூல்கள் மற்றும் பிரசுரங்கள் பதிவுச் சட்டம் 2010 என்றழைக்கப்படும்

2. பிரசுரங்கள், நாளிதழ்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், செய்தி ஏடுகள் போன்ற புதிய பதங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

3. நாளிதழ்களின் இணைய பதிப்பும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்

4. தீவிரவாத செயல்களுக்காக தண்டனை பெற்றவர்கள், நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான செயல்களை செய்தவர்கள் ஆகியோர் பிரசுரங்களை பதிப்பிக்க முடியாது

5. பெயரை சரிபார்க்க விரிவான செயல்முறைகள்

6. சர்குலேசன் தகவல்களை சரிபார்க்க சட்டரீதியான வழிமுறை

7. அயல்நாட்டு செய்திகள் (சின்டிகேசன்), அன்னிய முதலீடுகள் ஆகியவற்றுக்கு வரைமுறை

8. பதிப்பாளர்கள் வருடாந்திர அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு