Published:Updated:

வியாபாரிகளை ஜூஸ் பிழியும் வணிகவரி அதிகாரிகள்!

வை ராஜா வை ஆட்டம் ஆரம்பம்!

பிரீமியம் ஸ்டோரி

''தமிழகத்தின் நிதிநிலை சீர்குலைந்து விட்டது, அரசு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது, கடனில் மூழ்கி அரசு திவாலாகப் போகிறது என்றெல்லாம் சிலர் அறிக்கைவிட்டு வருகின்றனர். இது அவர்களது பகல் கனவின் பிரதிபலிப்பே. அரசின் கடன் ரூ.1.81 லட்சம் கோடிதான்''   சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்படிச் சொன்னார்.

வியாபாரிகளை ஜூஸ் பிழியும் வணிகவரி அதிகாரிகள்!

 ''நிதிநிலைமை மோசமாக இல்லை'' என்று தமிழக அரசு தம்பட்டம் அடித்தாலும் அது உண்மை இல்லை என்பதை வணிகவரித் துறை வெளிச்சம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''அரசிடம் நிதி இல்லை. உடனே வரியைக் கட்டுங்கள்'' எனச் சொல்லி வணிகர்களிடம் கெடுபிடி காட்டி வருகிறது வணிகவரித் துறை. நிதிநிலைமையை சமாளிக்க செய்யப்பட்ட இந்த ஏற்பாடு, சில அதிகாரிகள் காட்டில் பண மழையைப் பொழிய வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது வணிகர்களையும் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது.  

இதில் என்னதான் பிரச்னை? தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனிடம் பேசினோம். ''வாட் வரி என்ற மதிப்புக் கூட்டு வரி முறையைக்கொண்டு வந்தபோதே கடுமையாக எதிர்த்தோம். அதிகாரிகளுக்கு லாபம், விலைவாசி உயர்வு, ஆடிட்டர் செலவு என பல பிரச்னைகள் வாட் வரியால் ஏற்படும் எனச் சொல்லிப் போராடினோம். ஆனால், வாட் வரியைக் கொண்டு வந்துவிட்டார்கள். உளுந்து, அதன்பிறகு அது உளுத்தம் பருப்பு ஆகி அது விற்பனைக்கு வரும் வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் வரி விதிக்கப்படுகிறது. எந்தப் பொருள் எத்தனை பேரிடம் கைமாறினாலும்  வரி கட்ட வேண்டும் என்பதுதான் வாட் வரி. ஒவ்வொரு கட்டத்திலும் வரி விதிக்கப்படும் இந்த முறை வணிகர்களைக் கடுமையாக பாதிக்கிறது. வாட் வரி முறை அமலுக்கு வந்தபோது 10 லட்சம் ரூபாய் வரையில் வியாபாரம் செய்தால் அதற்கு வாட் வரி கிடையாது. கணக்கு காட்ட வேண்டாம் என்று அறிவித்தார்கள். ஆனால், இப்போது 7 ஆண்டு கணக்கை எடுத்து வரச் சொல்லி வணிகவரி அதிகாரிகள் வியாபாரிகளைத் தொந்தரவு செய்கிறார்கள். பழைய கணக்குகளை எல்லாம் எப்படி வியாபாரிகள் வைத்திருப்பார்கள்? இந்தக் கணக்கைக்கொண்டு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கணக்கைக் காட்டு... இல்லை, அபராதத்தைக் கட்டு எனச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துவிட்டு வியாபாரியிடம் அதிகாரிகள் பேரம் பேசுகிறார்கள். இரண்டு மூன்று லட்சத்தை  பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அபராதத்தை ரத்து செய்கிறார்கள். சில நேரங்களில் குறைந்த அபராதம் விதித்தும் லாபம் பார்க்கிறார்கள். இதனால் அரசின் கஜானாவுக்குப் போக வேண்டிய பணம் அதிகாரிகளின் பாக்கெட்டைதான் நிரப்புகிறது. அபராதம் என்கிற பெயரில் அதிகாரிகள் சிலர் கொள்ளை அடிக்கிறார்கள். விரைவில்

வியாபாரிகளை ஜூஸ் பிழியும் வணிகவரி அதிகாரிகள்!

ஜி.எஸ்.டி. என்கிற வரிவிதிப்பு முறையைக் கொண்டு வரப் போகிறார்கள். அது அமலுக்கு வருவதற்கு முன்பு வாட் வரி முறையில் உள்ள நிலுவைகளை வசூலித்துவிட வேண்டும் என அதிகாரிகள் களமிறங்கிக் கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். வரிவிதிப்பு முறை குறைவாக இருந்தால் வணிகர்கள் வரியைக் கட்டுவார்கள். அது அரசுக்கும் உதவும். அதிக விரி விதிப்பு முறை அதிகாரிகளுக்குத்தான் சாதகம். அரசுக்கு வருவாய் இழப்புதான்'' என்றார் வெள்ளையன்.  

வரியை முன்கூட்டியே கட்டச் சொல்லி வணிகர்களை அதிகாரிகள் துன்புறுத்தி வருகிறார்கள் என்ற பிரச்னையும் எழுப்பப்படுகிறது. இதுபற்றி பேசிய தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சண்முகநாதன், ''மாதந்தோறும் அட்வான்ஸ் டாக்ஸ் கட்டச் சொல்கிறார்கள். அடுத்த மாதத்தின் விற்பனை என்ன என்பது தெரியாமல், எப்படி முன்கூட்டியே வரியைச் செலுத்த முடியும்? இதைக் கட்டாயப்படுத்தி வசூலிக்கிறார்கள். வாட் வரி விதிப்பு முறையிலேயே இல்லாத ஒரு முறையைப் புகுத்தி அட்வான்ஸ் வரி வசூலிக்கப்படுகிறது. ரீஷீஷீபீs ணீஸீபீ sமீக்ஷீஸ்வீநீமீ tணீஜ் என்கிற ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முறையில் இருக்கிற சிக்கல்கள் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், அதற்கு முன்பே வாட் வரி தொடர்பான விவகாரங்களை முடிக்கப் பார்க்கிறார்கள். இமெயில் முகவரி, மின்னணு ஃபைல் முறை மூலம்தான் கணக்குகளை அளிக்க வேண்டும் என்பதால் வணிகர்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்'' என்றார்.

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம். ''உத்தேச வரி விதிப்பு எனச் சொல்லி வணிகர்களைக் கசக்கிப் பிழிகிறார்கள். இதில் அதிகாரிகள்தான் கையூட்டு என்ற பெயரில் வளம் கொழிக்கிறார்கள். அரசுக்கு எந்தப் பயனும் இல்லை. அட்வான்ஸ் டாக்ஸ் கட்டச் சொல்லி கேட்பார்கள். வணிகர்கள் விருப்பப்பட்டு கட்டுவார்கள். ஆனால், இப்போது கட்டாயப்படுத்துகிறார்கள். முறையாக ரசீது காட்டும் வாகனங்கள், பொருட்கள் எல்லாம் வணிகவரித் துறையினரால் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுகின்றன. எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகாரிகள் அதிக கெடுபிடி காட்டுகிறார்கள். ஆய்வு என்கிற பெயரில் வணிகர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை எல்லாம் கொண்டு வரச் சொல்லி வணிகர்களை மிரட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். மூன்று கோடி ரூபாய் அதிகாரிகளுக்குப் போனால், அரசுக்கு போவது ஒரு கோடிதான். இப்படித்தான் அதிகாரிகள் வணிகர்களிடம் அடாவடி வசூலில் இறங்கியிருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு வணிகவரித் துறையினர் வணிகர்களை 'சம்திங்’ என்ற பெயரில் மிரட்டுவதால், கூலி வேலைக்கே போய்விடலாம் என்ற நிலைதான் இருக்கிறது'' என்றார்.  

வியாபாரிகளை ஜூஸ் பிழியும் வணிகவரி அதிகாரிகள்!

வணிகவரிதான் அரசுக்கு அதிக அளவில் நிதி ஆதாரத்தைத் திரட்டித் தரக்கூடியது. தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கை வணிகவரிதான் ஈட்டித் தருகிறது. அந்த வகையில் வணிகவரிதான் அரசின் முக்கிய வருவாய் கேந்திரம். அந்த வணிகவரியை வசூல் செய்யும் வேட்டையில், அதிகாரிகள் முறைகேடு அதிகமாக ஆகிக்கொண்டு இருக்கிறது.  உண்மையில் பின்னணியில் இருப்பது அதிகார வர்க்கம்தான் என அதிகாரிகள் தரப்பு கை காட்டுகிறது.

வணிகவரி துறை கமிஷனர் ராஜாராமனிடம் பேசினோம். ‘‘அட்வான்ஸ் வரியைக் கட்டச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதிக அளவில் வியாபாரம் செய்கிறவர்கள் முன்கூட்டியே வரியைச் செலுத்த சொல்கிறோம். இது வேண்டுகோள் மட்டும்தான். கட்டாயம் இல்லை. வரியை வசூல் செய்வதில் சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பிதான் நடவடிக்கை எடுக்கிறோம். இதில் அதிகாரிகள் யாரும் தவறு செய்ய முடியாது. அப்படி யாராவது சில அதிகாரிகள் நடந்துகொண்டால் அதுபற்றி புகார் அளிக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திலும் முறையிட முடியும். வரி வருவாய் அரசுக்கு முக்கியம். அந்த அடிப்படையில் வரி கட்டாதவர்களைக் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். இதில் வணிகர்களை நெருக்குகிறோம் என்பதில் உண்மையில்லை’’ என்றார்.

‘யாரையும் கட்டாயப்படுத்தவில்லை!’

வணிகவரி துறை கமிஷனர் ராஜாராமனிடம் பேசினோம். ‘‘அட்வான்ஸ் வரியைக் கட்டச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதிக அளவில் வியாபாரம் செய்கிறவர்கள் முன்கூட்டியே வரியைச் செலுத்த சொல்கிறோம். இது வேண்டுகோள் மட்டும்தான். கட்டாயம் இல்லை. வரியை வசூல் செய்வதில் சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பிதான் நடவடிக்கை எடுக்கிறோம். இதில் அதிகாரிகள் யாரும் தவறு செய்ய முடியாது. அப்படி யாராவது சில அதிகாரிகள் நடந்துகொண்டால் அதுபற்றி புகார் அளிக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திலும் முறையிட முடியும். வரி வருவாய் அரசுக்கு முக்கியம். அந்த அடிப்படையில் வரி கட்டாதவர்களைக் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். இதில் வணிகர்களை நெருக்குகிறோம் என்பதில் உண்மையில்லை’’ என்றார்.

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு