Published:Updated:

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

ரமணி மோகனகிருஷ்ணன்

வ்வொரு வருடமும் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் தலைமையில் எடுக்கப்படும் பொருளாதார ஆய்வு (Economic Survey), இந்த வருடம் வெளியாகியிருக்கிறது. முன்பைவிட இந்த முறை பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையே பெண்களைக் குறிக்கும் வகையில், ‘பிங்க்’ நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இதில் வரும் சில ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகரமாகவும், பரிந்துரைகள் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியவையாகவும் இருக்கின்றன. அவை இங்கே... 

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

2005-06 மற்றும் 2015-16 இடையிலான கடைசிக் குழந்தைப் பெண்ணாகப் பிறப்பது 39.5% என்பதிலிருந்து 39% என மாறியிருக்கிறது. அதாவது, ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்த பிறகு, அடுத்த குழந்தையை விரும்புவது குறைவாக உள்ளது. பெண் குழந்தை பிறந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெற்றோர் குழந்தை பெறுவதை நிறுத்துவதில்லை என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

ஆண் குழந்தைகளை விரும்புவதால் 63 மில்லியன் பெண் குழந்தைகள், இந்தியாவிலிருந்து காணாமல்போனவர்கள் என்றும் 21 மில்லியன் பெண் குழந்தைகள் ’வேண்டாமல்’ பிறந்தவர்கள் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. 

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

மற்ற நாடுகளில் கல்வியின் மீது அவர்களுடைய செல்வம் 10.6% தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், இந்தியாவில் 59.9% அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, மாணவர்களின் கல்வியை 10.6%+59.9% = 70% எனத் தீர்மானிப்பது, செல்வமாக இருக்கிறது. 

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

ஒருவர் மீது செலுத்தப்படும் உடல் மற்றும் மனரீதியிலான வன்முறை மற்ற நாடுகளில், அவரவர் செல்வத்தைப் பொறுத்து 2.1% என இருக்கிறது. அது, இந்தியாவில் 33.5% என இருக்கிறது. 

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

இந்தியாவில் இருக்கும் 4,118 சட்டமன்ற உறுப்பினர்களில் 9% மட்டுமே பெண்களாக இருக்கின்றனர். அதிகமான பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மாநிலங்களில் பீகார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் 14 சதவிகிதமாகவும், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் 13%, பஞ்சாப் 12% என முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. 

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

கிராமங்களிலிருந்தும் விவசாயத்திலிருந்தும் ஆண்கள் இடம்பெயர்வது, விவசாயத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது என்றும், நாற்று நடுவதில் தொடங்கி கூலித் தொழிலாளர்கள் வரை பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றும் இந்த ஆய்வு சொல்கிறது. விவசாயக் கொள்கைகள், பெண்களை முன்வைத்தும் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. 

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

2005-06 ஆண்டில் 36% என இருந்த வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை, 2015-16 ஆண்டில் 24% எனக் குறைந்திருக்கிறது.

பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன இந்தியப் பெற்றோர்கள் எண்ணிக்கை 21 மில்லியனாம்! #EconomicSurvey #PhotoStory

ஆண், பெண் வேறுபாடு மற்றும் ஆண் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது குறித்த பகுதியின் தொடக்கத்திலேயே, சர்வதேசப் பணம் நிதியத்தின் தலைவரான கிறிஸ்டின் லெகார்ட், உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு சந்திப்பில், 'வேலை இடங்களில் ஆண்-பெண் விகிதம் சமமானால், இந்தியப் பொருளாதாரம் 27% உயரும்' என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியிருக்கிறது.