Published:Updated:

பதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!

Vikatan Correspondent
பதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!
பதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!
பதவி உயர்வு: இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!

புதுடெல்லி: அரசு பதவிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு இட  ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய இணையமைச்சர்  வி.நாராயணசாமி மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி  மாநிலங்களவையில்,கடந்த சில தினங்களாக குரல் எழுப்பி வந்த நிலையில், வேறு சில  பிரச்னைகளுக்காக ஏற்பட்ட அமளி காரணமாக இம்மசோதா தாக்கலாவது தள்ளிப்போனது.

##~~##
இதனால் அவர் நேற்று மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரியுடன் நேருக்கு நேர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

12 மணிக்கு பின்னர் அன்சாரி அவைக்கே வருவதில்லை  என்றும், அவையை சீராக நடத்தும் பொறுப்பை அவர் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றம்  சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவை மத்திய இணை அமைச்சர்  நாராயண சாமி இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இம்மசோதா மீது வருகிற திங்கட்கிழமையன்று வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.

முன்னதாக இம்மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்..