Published:Updated:

எந்த சவாலையும் எதிர்கொள்வோம்: ராணுவ தளபதி

எந்த சவாலையும் எதிர்கொள்வோம்:  ராணுவ தளபதி
எந்த சவாலையும் எதிர்கொள்வோம்: ராணுவ தளபதி
எந்த சவாலையும் எதிர்கொள்வோம்:  ராணுவ தளபதி

டெல்லி: நாட்டைப் பாதுகாப்பில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம் என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த 65வது இந்திய ராணுவ தின விழாவில் பேசிய அவர் 'எல்லையை காக்க இந்திய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது. என் நாட்டு மக்களுக்கு நான் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன். நாட்டையும் மக்களையும் காப்பதில் எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார்