Published:Updated:

ஒரு குடம் குடிநீர் 1 ரூபாய்... வடசென்னையை அச்சுறுத்தும் `கோடைப் பஞ்சம்'!

ஒரு குடம் குடிநீர் 1 ரூபாய்... வடசென்னையை அச்சுறுத்தும் `கோடைப் பஞ்சம்'!

ஒரு குடம் குடிநீர் 1 ரூபாய்... வடசென்னையை அச்சுறுத்தும் `கோடைப் பஞ்சம்'!

ஒரு குடம் குடிநீர் 1 ரூபாய்... வடசென்னையை அச்சுறுத்தும் `கோடைப் பஞ்சம்'!

ஒரு குடம் குடிநீர் 1 ரூபாய்... வடசென்னையை அச்சுறுத்தும் `கோடைப் பஞ்சம்'!

Published:Updated:
ஒரு குடம் குடிநீர் 1 ரூபாய்... வடசென்னையை அச்சுறுத்தும் `கோடைப் பஞ்சம்'!

`பொதுக் குடிநீரை விற்பது சட்டப்படி குற்றம்' என்கிறது அரசு. ஆனால், டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு `சின்டெக்ஸ்'  டாங்குகளில் நிரப்பப்படும் குடிநீரோ, காசு கொடுக்காமல் கிடைப்பதில்லை. கடந்த வாரம், 25 பைசாவிலிருந்து 50 பைசாவாக, திடீர் விலையேற்றம் பெற்ற குடம் நீர், நேற்று முதல் (மார்ச், 25) 1 ரூபாய் மற்றும் 1.50 காசுகளாக, இடத்துக்கு ஏற்றார் போல் விலை உயர்ந்துள்ளது. ``டாங்கர் லாரிகளில், கொண்டு வரப்படும் குடிநீரை விற்பனை செய்வதற்கு வசதியாக பொதுக்குழாய்களில் குடிநீர் இணைப்பைத் துண்டித்து வைத்துள்ளனர்" என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறார்கள் பொதுமக்கள்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, தட்டான்குளம் தெருவாசிகளான மூதாட்டிகள் ஜானகி, முனியம்மாள், சரோஜா, சாந்தி, ராணி ஆகியோர் இதுகுறித்துப் பேசியபோது, ``டாங்குகளில் சேமிக்கப்பட்ட குடிநீரை ஒரு குடம் 1 ரூபாய் என்று இங்கே விற்கிறார்கள். டாங்க் குடிநீர் விற்றுத் தீர்ந்தபின்னர், சொல்லி வைத்ததுபோல் பொதுக்குழாயில் குடிநீரை விடுகிறார்கள். அதுவும் கழிவுநீர் கலந்துதான் வருகிறது. யாரிடம் போய்ச் சொன்னாலும், இதற்கு முறையான பதில் கிடைப்பதில்லை" என்றனர். சென்னையின் பல பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களும் இவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுகளையே சொல்கிறார்கள். 

...குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுக்கக் கோரி புகார் கொடுத்தவர்களுக்கு அதிகாரிகள் என்ன பதில்தான் தருகிறார்கள்?  சென்னை ராயபுரம் தே.மு.தி.க. பிரமுகரான வெ.பாபு கூறுகையில், ``சோலையப்பன் தெருவில் உள்ள குடிநீர் பொதுக் குழாயில் கழிவுநீர் வருவதாகக் கடந்த 15 ம் தேதி அதிகாரிகளுக்குத் தொலைபேசியில் புகார் கொடுத்தேன். புகார் எண்: 1803150091 என்று  சொல்லி அந்த எண்ணையும் குறித்து வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரு வாரம் ஆனபின்னும், குழாய்ப்பிரச்னை சரிசெய்யப்படவில்லை. அதிகாரிகளுக்கு மீண்டும் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். `என்ன சார், இப்படிச் சொல்றீங்க... அதை அப்போதே சரி செய்துவிட்டோமே...  உங்களுக்குத் தெரியாதா?' என்றனர். நான் உடனே, அந்தக் குழாய் இருந்த சோலையப்பன் தெருவுக்குப் போனேன். அப்போதுதான் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், கருவிகளுடன் குழாயை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நானும் ஓரமாக நின்று நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஸ்பேனர் கருவியின் மூலம் குழாயைக் கழற்றி ஏதோ சர்வீஸ் செய்து விட்டுப் போனார்கள். அதன்பின் நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அடுத்தநாள் சோலையப்பன் தெருவிலுள்ள பொதுக்குழாய்க்குப் போய்த் தண்ணீரைப் பார்த்தேன்.  அங்கிருந்த பொதுமக்கள் என்னை முறைத்தபடி, 'நீங்கள் புகார் செய்வதற்கு முன்பு, கொஞ்சம் நாற்றத்தோடு மட்டுமே தண்ணீர் வந்தது. இப்போது, சேறு மட்டுமே வருகிறது' என்றனர். சென்னையில் பல வார்டுகளில் குடிநீர், கழிவுநீர் அகற்று வாரிய இளநிலைப் பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல் உதவி பகுதிப் பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் குறைகளைச் சொல்லவோ, தீர்க்கவோ வழியின்றி திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்பெண்ணை, கெடிலம், வராக நதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர், அடையாறு, செய்யாறு, பாலாறு, ஆரணியாறு, அமராவதி, பொன்னை, பாம்பாறு, கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாறு, அக்கினி ஆறு, வைகையாறு, காவிரி, குடமுருட்டி, ஜம்பு நதி, கோராம்பள்ளம், சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வரவனாறு, சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு, கெளசிகா நதி, கடனா நதி, சிற்றாறு, இராமநதி, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடி ஆறு, கருமேனியாறு, வாட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு என நதிகளின் நீர்நிலைப் பட்டியல் நீள்கிறது.

 அதேபோல் வைகை நதிப் படுகை, வைகை, மஞ்சளாறு, மருதா நதி, வைப்பார் நதிநீர்ப் படுகைகள், பிளவுக்கல், வெம்பக் கோட்டை நீர்த்தேக்கம், தாமிரபரணி நதிப் படுகை, மணிமுத்தாறு நதிப் படுகைகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு ஒன்று, சித்தாறு இரண்டு, பெரியாறு நதிப்படுகைகள் என ஏராளமான நீர்த்தேக்கங்கள், அணைகள் கண்ணெதிரே இருந்தாலும் தண்ணீர்மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இல்லை. நீராதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சிறப்பாக இல்லை. வீராணம் நீர் வரத்து முற்றிலும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒரு குடம் தண்ணீர் 1 ரூபாய் முதல் 1.50 காசுகள் வரை விற்கப்படுகிறது. குடிநீரைச் சுத்தமாகவும், போதுமான அளவிலும் மக்களுக்கு வழங்க அரசு தயாராக இல்லை. குடிநீர் விற்பனையையும் தடுப்பதாக இல்லை......