Published:Updated:

விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை

விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை
விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை
விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை

புதுடெல்லி: வாக்குறுதியை காப்பாற்றாவிடில் அதற்கான விளைவை இத்தாலி சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதியோடு இத்தாலி வீரர்கள் இரண்டு பேர் நாடு சென்றனர்.

இதனிடையே, இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரண்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இத்தாலி தூதரை நேரி்ல் வரவழைத்து இந்தியா கண்டித்தது.

இந்த நிலையி்ல், மக்களவை இன்று காலை கூடியதும் இத்தாலி வீரர்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரச்னை எழுப்பியது.

##~~##
இதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மன்மோகன் சி்ங், வழக்கை சந்திக்கும் இத்தாலி வீரர்கள் திரும்ப வருவர் என வாக்குறுதி தரப்பட்டது என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு இத்தாலி நாட்டின் பிரதிநிதி வாக்குறுதி அளித்தனர் என்றும் கூறினார்.
இத்தாலி பிரதிநிதி அளித்த வாக்குறுதியை காப்பாற்றாதது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய பிரதமர், இத்தாலி நடவடிக்கை இருநாட்டு இடையிலான உறவு சுமூகமாக தொடர ஏற்புடையதல்ல என்றார்.
வழக்கை சந்திக்கும் இத்தாலி வீரர்கள் 2 பேரையும் திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் விளக்கம் அளித்தார்.