Published:Updated:

`ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடப்பது குடும்ப சண்டை' - சொல்கிறார் இல.கணேசன்!

`ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடப்பது குடும்ப சண்டை' - சொல்கிறார் இல.கணேசன்!
`ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடப்பது குடும்ப சண்டை' - சொல்கிறார் இல.கணேசன்!

`ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடப்பது குடும்ப சண்டை' - சொல்கிறார் இல.கணேசன்!

தி.மு.கவில் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னை என்பது உள்கட்சி சண்டை இல்லை. உள் குடும்ப சண்டை என பா.ஜ.க தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ஜ.கவின் தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ``சென்னை கமலாலயத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி காவிரியில் கரைப்பதற்காக கொண்டு வரப்படப்பட்டு வைக்கப்படிருந்த போது அஸ்திக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். தமிழகத்தில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் புனித நதிகளில் அஸ்தி கரைக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து சென்னையில் வரும் 28ம் தேதி இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரி நீருக்காக அதிக அளவில் கூக்குரல் கொடுத்துள்ளது. சாதாரண கட்டத்தில் அணைகள் எந்த நிலையில் இருக்கிறது என்று சோதித்து பார்த்திருக்க வேண்டும். அப்படி சோதித்து பார்த்திருந்தால் முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்டு இருக்காது. வறட்சி என்பது ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். இந்த காலங்களில் ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு ஆண்டவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு ஆகும். ஆனால் அதை ஆட்சியில்  உள்ளவர்கள் செய்ய தவறி விட்டார்கள். தற்போது அதை பற்றி குறை சொல்லி எந்த பயனும் இல்லை. ஆட்சியாளர்கள் இனியாவது விழித்து கொண்டு ஏரி, குளங்களை போர்கால அடிப்படையில் துார்வார வேண்டும். கல்லணையை பொறுத்த வரை கரிகாலன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் அதன் பிறகு கட்டிய அணைகளை பற்றிதான் கவலை படுகிறேன். 

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஐக்கிய அரபு நாடு 700 ரூபாய் கோடி தருவதாக கூறியது. இந்த நிதியை மத்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதைவிட அதிகமாகவே மத்திய அரசு தர தயாராக இருக்கிறது. அந்நிய நாடுகள் பணம் தர வேண்டும் என்றால் முறையாக மத்திய அரசிடம் கேட்டு தர வேண்டும். அவ்வாறு கேட்காமல் கொடுக்கும் பட்சத்தில் தனி அமைப்புகள் தவறாக பயன்படுத்தி கொள்ள நேரிடும். கேரளா இல்லமால் மத்திய அரசு இல்லை, தமிழகம் இல்லமால் மத்திய அரசு இல்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்து தான் வரும் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர். கூட்டணி அமைவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். 

எட்டு வழிசாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு நிச்சயம் வெற்றி பெறும். இந்த திட்டதால், பயண நேரம், எரிப்பொருள் சிக்கனம், வியபாரிகளுக்கு நல்லது போன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன. முந்தையை ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் தங்கள் பகுதிகளுக்கு திட்டங்களை அறிவித்து, அடிக்கல் நாட்டி விட்டு விழா எடுத்துக்கொண்டதோடு சரி. அது செயல்பாடுகளில் வரவில்லை. நாட்டில் இதுபோன்று 600 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. முதலில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகிறார் என்று தகவல் வருகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னை என்பது உள்கட்சி சண்டை இல்லை. உள் குடும்ப சண்டை" இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு