Published:Updated:

“உனக்கு போக மிச்சம் இருக்கிற எல்லாமே இன்னொருவருடையது” மாவோ சித்தாந்தம்! #RememberingMao

“உனக்கு போக மிச்சம் இருக்கிற எல்லாமே இன்னொருவருடையது” மாவோ சித்தாந்தம்! #RememberingMao
“உனக்கு போக மிச்சம் இருக்கிற எல்லாமே இன்னொருவருடையது” மாவோ சித்தாந்தம்! #RememberingMao

“புரட்சி என்பது மாலைநேர விருந்துண்ணலோ, தையல் வேலைப்பாடோ அல்ல. 
அது, அவ்வளவு இலகுவாகவும், மென்மையாகவும் இருந்திடாது.” - என்று உள்ளூர் அரசியல் மக்களை மழுங்கடித்துக்கொண்டிருந்த போது மக்களின் மனதில் பொதுவுடமையையை பயிரிட்டார் மாசேதுங்

பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்னடைவைச் சந்தித்திருந்தது, சீனா. பொதுவுடைமைக்கட்சித் தலைவராய்ப் போராடி ஆட்சியைப்பிடித்து, புதிய சீனத்தை உருவாக்கும் பெரும்பணியைக் கையிலெடுத்தார், மாசேதுங். பொதுவுடைமைச் சிந்தனை இவரைத் தனது இளம்வயதிலேயே ஆக்கிரமித்து இருந்திருக்கிறது. தனக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் பார்த்து, கூடுதலாய்க் கிடைத்த தானியங்களைப் பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துவந்ததோடு, ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்றுவந்தார். இருப்பவரிடம் பெற்று இல்லாதோர்க்குக் கொடுப்பதால், பொருளாதாரச் சமநிலை சாத்தியம்தானே!

உலகின் ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வரலாறுகளால் கட்டமைக்கப்பட்டது. மிகச்சில சித்தாந்தங்கள்தான் உலகம் முழுமைக்குமான மக்களுக்காய் பொருந்தி வருவன. அத்தகைய சித்தாந்தத்தை ஒரு நாடு அப்படியே ஏற்றுக்கொள்வதற்கான தேவை கிடையாது. நாடு, மக்கள், வரலாற்றுப்பின்புலம், கால மாறுபாடு போன்றவற்றிற்கேற்பச் சிந்தாந்தங்கள் தன்னில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான மாற்றம், சித்தாந்தங்களின் கருதுகோள்களை வென்றெடுப்பதற்கு உறுதுணை செய்யும். 

சித்தாந்தங்களின் மீதான தன் கருத்தையும், பரிந்துரையையும் சொல்வதற்கான உரிமை, எந்த ஒரு தனிமனிதனுக்கும் நிச்சயம் உண்டு. ‘ஒரு நாட்டில் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்தினுடைய சர்வாதிகார அரசுதான் ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்ற மார்க்சிய கருத்தை ஏற்காத மாசேதுங், சீனத்தில் தொழிலாளர்களையும், சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச்சர்வாதிகாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தனது கருத்தை முன்மொழிந்தார்.

ஒவ்வொரு தனிமனிதனும் தனது தேவைகளைத் தனக்குத் தானே தீர்த்துக்கொள்வதற்கு, இந்த கம்யூனிசங்களின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பதே வழியென்று மாவோ எண்ணினார். மேலும், இதன்மூலம் அரசின் முக்கியத்துவத்தினைப் படிப்படியாகக் குறைத்துவிட முடியும் என்றும் நம்பினார். பொதுவுடைமைக்கோட்பாட்டினை நோக்கிச் சீனக்குடிமைச் சமத்துவ சமூகம் முன்னேறிச்செல்வதற்கு மக்கள் கம்யூனிசங்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும் மாவோ கருதினார். மாவோவின், ‘அரசு பற்றிய மக்கள் கம்யூனிசக்கொள்கையை’ அடிப்படையாகக்கொண்டுதான், மூன்றாம் உலகநாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் மக்கள் புரட்சி சக்திகள் எழுகின்றன.

சீனதேசத்தில் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தத் தொடங்கிய மாசேதுங். 1976ஆம் ஆண்டின் தன் காலத்து இறுதிவரையிலும் அவர் செயல்படுத்திய கொள்கைகளால், முழுவதுமாக மாறியிருந்தது, சீனம். நவீனம், நாட்டை நிறைக்கத் துவங்கியது. சீனத்தை முற்றிலும் தொழில்மயமாக்கும் பணிகள் நடைபெறத் துவங்கின. பொதுக் கல்விமுறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அனைவருக்குமான பொது சுகாதார முறை ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தலைவராகவும், மக்களுக்கான தேவைகளையறிந்து அதற்காகக் களமிறங்கிப் போராடும் தோழராகவும் வாழ்ந்துவிட்டுப் போனவர், இன்று வாழ்பவர்களுக்கு வழிகாட்டுகிறார், மக்களால் மாவோ என்றழைக்கப்பட்ட மாசேதுங்!

தலைவர்கள் வருவதும் போவதும் உலகநாடுகளின் மூலைமுடுக்கெங்கும் நிகழ்பவைதான். நல்ல பல சரித்திர மாற்றங்களுக்குக் காரணங்களாய் இருந்தவர்கள்தான், சரித்திரத்தில் நிலைக்கும் தலைவர்களாய்ப் புகழ் எய்துகின்றனர். நல்ல தலைவர்களுக்காக ஏங்கும் அரசுகளுக்கு மாசேதுங் கொடுத்த பொதுவுடமை ஒரு பாடம்