Published:Updated:

திருமணத்திற்கு வெளியிலான உறவு குற்றமல்ல! - சரியா... தவறா? #VikatanSurvey

திருமணத்திற்கு வெளியிலான உறவு குற்றமல்ல! - சரியா... தவறா? #VikatanSurvey
திருமணத்திற்கு வெளியிலான உறவு குற்றமல்ல! - சரியா... தவறா? #VikatanSurvey

ன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சுதந்திரம், சட்டப்பிரிவு 497 நீக்கம், சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி எனக் கடந்த சில நாள்களாக உச்ச நீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகள் நாடு முழுவதும் விவாதமாகியுள்ளன. சட்டப்பிரிவு 497 ``திருமணமான பெண்ணுடன் கணவரைத் தவிர வேறோர் ஆண், கணவரின் அனுமதியின்றியோ, தெரியாமலோ உறவு கொண்டால், அந்த ஆணுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். பெண்ணுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது" என வகுக்கப்பட்டிருந்தது. 

இந்தச் சட்டப்பிரிவு தற்போது உச்ச நீதிமன்றத்தால் `காலனியச் சட்டம்' எனக் கருதப்பட்டு, ``பெண்ணுக்குக் கணவன் எஜமான் இல்லை. இரு மனிதர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் சட்டம் தலையிடக் கூடாது" என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு பலதரப்பட்ட மக்களிடையே ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது. 

`திருமணமான பெண்ணோ, ஆணோ பரஸ்பர விருப்பத்தோடு திருமணம் தாண்டிய பாலுறவு கொள்வது குற்றமல்ல' என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பைப் பற்றி உங்கள் கருத்துகளை இந்த சர்வேயில் பதிவு செய்யுங்கள்...  

loading...