Published:Updated:

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!
பிரீமியம் ஸ்டோரி
திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

Published:Updated:
திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!
பிரீமியம் ஸ்டோரி
திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

ள்ளாட்சித் தேர்தல், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டுறவுச் சங்கங்களுக்கானத் தேர்தல் அறிவிப்பைத் திடீரென வெளியிட்டு அரசுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது, தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை, மீன் வளத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை மத்திய அரசின் நபார்டு வங்கி மேற்பார்வை செய்துவருகிறது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தன. அதே போல், பால்வளம், கைத்தறி உள்ளிட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களும் அப்போதே முடிவடைந்தன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தி,  தலைவர் மற்றும் இயக்குநர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இந்தத் தேர்தலைத் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் நடத்தும். இந்த அமைப்பும் இந்தியத் தேர்தல் ஆணையம் போன்றே தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு.

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

தொடக்கச் சங்கங்கள், மத்தியச் சங்கங்கள், மாநிலச் சங்கங்கள் என மூன்று அமைப்புகளில் தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்குத் தேர்தல்களை ஐந்து கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி-க்களுக்கு முறையான அறிவிப்பையும் அனுப்பியுள்ளது கூட்டுறவுத் தேர்தல் ஆணையம்.

மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்ற நாளில் இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியானது ஆளும்தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நம்மிடம் பேசிய கூட்டுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர், ‘‘இந்தத் தேர்தல் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த மாதம், சென்னையில் கூட்டுறவு அமைப்புகளின் ஆணையர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போதே, தேர்தல் பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆணையர், ‘கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தலுக்காக நாம் அரசு அனுமதிக்குக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்பது அப்போதே தெரிந்துவிட்டது.

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

கூட்டுறவுச் சங்கங்களின் கீழ்தான் ரேஷன் கடைகளும் வருகின்றன. ரேஷன் கடைகளில் கட்டுனர் மற்றும் விற்பனையாளர் என 3,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் முடிவடைந்துவிட்டது. ஆனால், பணி ஆணை யாருக்கும் வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் அழுத்தம்தான். ஒரே பதவிக்கு ஆளும்கட்சியைச் சேர்ந்த பலரும் பரிந்துரை செய்த காரணத்தால் குழப்பமடைந்த அமைச்சர், ‘மே மாதம் வரை இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம். இந்த நிலையில்தான் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. இதனால், ரேஷன் கடைகளுக்கான பணியிடங்களில் தேர்தல் முடியும் வரை யாரையும் பணியமர்த்த முடியாத நிலை. இந்த நியமனங்களுக்காகப் பணம் வாங்கிய புள்ளிகள், விழிபிதுங்கித் தவிக்கிறார்கள்’’ என்றார்.

ஆளும்கட்சி பன்னீர் அணி, எடப்பாடி அணி என்ற இரண்டு அணிகளாக உள்ளன. கூட்டுறவுச் சங்கப் பொறுப்புகளை  இரண்டு அணிகளும் பிரித்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும் . தினகரன் தரப்பிலும் கோதாவில் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

‘அரசுக்கே தெரியாமல்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது’ என்ற பேச்சும் கோட்டையில் உலவுகிறது. கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையரான, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடையும்போது, தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இனி வரிசையாக கைத்தறி, பால்வளம் உள்ளிட்ட கூட்டுறவு அமைப்பு களுக்கான தேர்தல் அறிவிப்பையும் வெளியிடுவோம். ஜூலை மாதத்துக்குள் அனைத்துத் தேர்தல்களும் முடிவடைந்துவிடும்.  அரசின் அனுமதியையோ, கூட்டுறவுத் துறை அமைச்சரின் அனுமதியையோ கேட்க வேண்டிய தேவை இல்லை’’ என்றார்.

திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘இந்தத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. அந்தத் தேர்தலில் நாங்கள் தலையிடப் போவதில்லை” என்கிறார்.

ஆனால், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களோ, ‘‘இந்த அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தேர்தலால் பல மாவட்டங்களில் கட்சிக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அரசு நேரடியாக இந்தத் தேர்தல் நடைபெறுவதைத் தள்ளிப்போடமுடியாது. ஆனால், யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்தால், தேர்தல் தள்ளிப்போகலாம்’’ என்று பொடி வைத்துப் பேசினார்.

அப்ப, ‘வழக்கு வரும்’னு சொல்லுங்க!

- அ.சையது அபுதாஹிர்

‘‘எனக்குத் தொடர்பில்லை!’’

‘ச
வுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்!’ என்ற தலைப்பில் 7.3.18 ஜூ.வி இதழில் புதுக்கோட்டை ராமச்சந்திரன் குறித்து செய்தி வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் நமக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சவுடு மணல் குவாரிகள் என் மேற்பார்வையில் செயல்படுகின்றன என்பதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. மணல் குவாரிகளுக்கான அனுமதி எதையும் நான் பெறவில்லை. எனக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.