Published:Updated:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல்!

புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது.

நிலம் கையக்கப்படுத்துதல் மசோதா தொடர்பாக கடந்த 9 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது அரசியல் கட்சிகளுக்கிடையே இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இந்நிலையில் இம்மசோதா குறித்து மீண்டும் இன்று அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதையடுத்து, இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இம்மசோதா வருகிற திங்கள் கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.