Published:Updated:

சீன அத்துமீறல்: தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்- ஏ.கே. அந்தோணி

புதுடெல்லி: லடாக் எல்லை பகுதியில் சீன படையினர் அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர் இந்திய எல்லைக்குள் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி நுழைந்து கூடாரம் அமைத்ததாக புகார் எழுந்துள்ளது.

##~~##
இதுதொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்றத்துக்கு வெளியே பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

சீனா மறுப்பு

இதனிடையே இந்திய எல்லைக்குள் தங்களது  படையினர் அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீன அரசு மறுத்துள்ளது.