Published:Updated:

`ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்பட்டால் பூகம்பம் ஏற்படும்'! - எச்சரிக்கும் அன்புமணி

`ஹைட்ரோகார்பன் திட்டம்  அனுமதிக்கப்பட்டால் பூகம்பம் ஏற்படும்'! - எச்சரிக்கும் அன்புமணி
`ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்பட்டால் பூகம்பம் ஏற்படும்'! - எச்சரிக்கும் அன்புமணி

அடிமை அரசு நடப்பதால் தமிழகம் பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி கவலை தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி மாபெரும் பொதுக்கூட்டம் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ``இந்தியாவின் சமவெளிப் பகுதியாக இருப்பது காவிரி டெல்டா மாவட்டங்கள்தான். இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய டெல்டா மாவட்டங்களில் 28 லட்சம் ஏக்கர் செய்து வந்த விவசாயம் இன்று பாதியாக குறைந்து 15 லட்சம் ஆகிவிட்டது. இதற்கு காரணம் 50 ஆண்டுகளாக கண்மூடித்தனமாக ஆட்சி செய்து தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காத திராவிட கட்சிகள்தான் என்று கூறினார்.

`ஹைட்ரோகார்பன் திட்டம்  அனுமதிக்கப்பட்டால் பூகம்பம் ஏற்படும்'! - எச்சரிக்கும் அன்புமணி

தமிழக விவசாயிகள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோலிய மண்டலத்துக்கும், மீத்தேன் திட்டத்துக்கும் அனுமதி அளித்தது தி.மு.க.தான். தற்போது அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களும் அவர்கள்தான். டெல்டா மாவட்டங்களுக்கு மோடி வடிவத்திலும் எடப்பாடி பழனிசாமி வடிவத்திலும் பேராபத்து வந்திருக்கிறது. கடந்த மாதம் மோடி அரசு கையொப்பமிட்ட 54 ஹைட்ரோகார்பன் திட்ட உரிமங்களில் 3 உரிமங்கள் தமிழ்நாட்டை குறி வைக்கிறது. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு டெல்டா மாவட்டத்தில் இரண்டு உரிமங்கள் கொடுத்து புண்ணிய பூமியை பாலைவனமாக்க மோடியும், எடப்பாடி பழனிசாமியும் துடிக்கிறார்கள்.

நிலத்துக்கு அடிப்பகுதியில் இருந்து அனைத்து எண்ணெய் எரிவாயு பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான ஒரே பெயர்தான் ஹைட்ரோகார்பன் திட்டம். ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்பட்டால் ஒவ்வொரு எண்ணெய்க் கிணறும் 30 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு ரசாயனங்கள் பயன்படுத்தி பூமியில் பிளவு ஏற்படுத்துவார்கள். அதனால் நில அதிர்வு ஏற்படும், காலப்போக்கில் பூகம்பம் ஏற்படும். இந்தப் பகுதி பாலைவனமாக மாறி, மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி அகதிகளாக நாம் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தில் அடிமைகள் அமைச்சர்களாகவும், சீனியர் அடிமைகள் இன்று ஆட்சி செய்கிறது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்துக்குள் ஒட்டுமொத்த ஓ.என்.ஜி.சி பணிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு விடுவோம்" என்று தெரிவித்தார்.