Published:Updated:

சீன அத்துமீறல்: ஊடுருவல் பகுதியிலிருந்து வெளியேற இந்தியா கண்டிப்பு!

சீன அத்துமீறல்: ஊடுருவல் பகுதியிலிருந்து வெளியேற இந்தியா கண்டிப்பு!
சீன அத்துமீறல்: ஊடுருவல் பகுதியிலிருந்து வெளியேற இந்தியா கண்டிப்பு!

புதுடெல்லி/ஸ்ரீநகர்: லடாக் எல்லை பகுதியில் சீன படையினர் அத்துமீறி ஊடுருவியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஊடுருவல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு ராணுவத்திற்கு இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது.

சீன அத்துமீறல்: ஊடுருவல் பகுதியிலிருந்து வெளியேற இந்தியா கண்டிப்பு!

கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரம் அமைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, "நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங், ஜம்மு காஷ்மீரில் தனது இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.

##~~##
இதுஒருபுறம் இருக்க, எல்லைப்பகுதியை நோக்கி இந்திய ராணுவம் தனது படைகளை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் போர் புரிவதில் வல்லமை கொண்ட படைப் பிரிவினர் லடாக் பகுதியில் உள்ள டால்ட் பெக் ஓல்டி என்ற பகுதிக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும்,அவர்களுடன் இந்தோ - திபெத்திய படையினரும் சீன துருப்புகள் கூடாரம் அமைத்து தங்கியுள்ள இடத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவிய பிரச்னையை பகிரங்கப்படுத்தாமல் ரகசியமாக கையாள மத்திய அரசு விரும்புகிறபோதிலும், அரசு தலைமை மட்டத்தில் கவலை காணப்படுவதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, இதுபோன்று பலமுறை ஊடுருவியுள்ளது.

இந்தியா - சீனா பேச்சுவார்த்தை

இந்நிலையில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையேயான இரண்டாவது கொடி சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது சீன படையினரின் அத்துமீறிய ஊடுருவலுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் லடாக் பகுதியில் ஊடுருவிய இடத்திலிருந்து சீன படையினரை திரும்ப பெறுமாறும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முந்தைய நிலையையே தொடர வேண்டும் என்று சீனாவை  வலியுறுத்தியதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் செய்யத் அக்பருதீன் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இருதரப்பு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான கொடி சந்திப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அதேப்போன்று இந்தபிரச்னையும் சுமூகமாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இந்திய அரசுக்கு உள்ளதாகவும் கூறினார்.