Published:Updated:

ஊடுருவலை தொடர்ந்து இந்திய வான்வெளியில் பறந்த சீன ஹெலிகாப்டர்கள்!

 ஊடுருவலை தொடர்ந்து இந்திய வான்வெளியில் பறந்த சீன ஹெலிகாப்டர்கள்!
ஊடுருவலை தொடர்ந்து இந்திய வான்வெளியில் பறந்த சீன ஹெலிகாப்டர்கள்!
 ஊடுருவலை தொடர்ந்து இந்திய வான்வெளியில் பறந்த சீன ஹெலிகாப்டர்கள்!

புதுடெல்லி: லடாக் ஊடுருவலைத் தொடர்ந்து இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரம் அமைத்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, "நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியிருந்தார்.

அதன்படி எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங், ஜம்மு காஷ்மீரில் தனது இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.

அத்துடன் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையேயான இரண்டாவது கொடி சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது சீன படையினரின் அத்துமீறிய ஊடுருவலுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.

##~~##
இதனிடையே லடாக் பகுதியில் சீன படையினர் ஊடுருவிய அதே தினத்தன்று, அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதியன்று சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளிக்குள் பறந்து வந்து, பின்னர் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் டெல்லியில் உள்ள சீன தூதரக அதிகாரி இதனை மறுத்துள்ளார். "எங்களது வெளியுறவு துறை அமைச்சகம் கூறியவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீன படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.