Published:Updated:

இந்திய எல்லைக்குள் சீனா 19 கி.மீ. தூரம் ஊடுருவல்!

இந்திய எல்லைக்குள் சீனா 19 கி.மீ. தூரம் ஊடுருவல்!
இந்திய எல்லைக்குள் சீனா 19 கி.மீ. தூரம் ஊடுருவல்!

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் 19 கி.மீ. தூரத்துக்கு சீன ராணுவம் ஊடுருவி கூடாரம் அமைத்துள்ளதாகவும், எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய எல்லைக்குள் சீனா 19 கி.மீ. தூரம் ஊடுருவல்!

இது தொடர்பாக பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு, பாதுகாப்புத் துறை செயலர் சசி காந்த் சர்மா மற்றும் சில உயர் அதிகாரிகள் நிலைக்குழு ஆஜராகி கூறுகையில்," ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய எல்லைக்குள் 19 கி.மீ. தூரத்துக்கு சீன ராணுவம் ஊடுருவி வந்து டெப்சாங் என்ற இடத்தில் கூடாரம் அமைத்துள்ளதாக ஏப்ரல் 16 ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கமான நடைமுறைகளின்படி, இரு நாடுகளைச் சேர்ந்த எல்லைப் படை அதிகாரிகள் நிலையில் கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், எல்லைப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனா, இந்தியா இடையே சர்வதேச எல்லை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. சில இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே உடன்பாடு ஏற்படவில்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்தனர்.

முன்னதாக சீன படையினர் 10 கி.மீ, தூரம் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.