முன்னறிவிப்பு இல்லாமல் ஏரி திறப்பு, நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர், மீட்பிலும் நிவாரணத்திலும் பொங்கிய மனிதநேயம் என நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்த, சென்னையைப் பெரு வெள்ளம் சூழ்ந்த 2015-ம் ஆண்டை மறக்க முடியுமா?

வலிகள், போராட்டங்கள், உயிரிழப்புகள் ஆகிய அனைத்தையும்விட அரசு காட்டிய மெத்தனம் நம்மைவிட்டுக் கடந்து போய்விடாது. இந்த அவலங்கள் அனைத்தையும் அப்போதே பதிவுசெய்தது ஜூனியர் விகடன். ‘பயனற்றுப்போன ‘தானே’ புயலின் பாடங்கள்!’, ‘தாமதமாக வந்த முதல்வர்... அலட்டிக்கொள்ளாத அமைச்சர்கள்! செயல்படாத மேயர்’, ‘மழை... யார் செய்த பிழை?’, ‘பேரழிவிலும் பப்ளிசிட்டி... ஆளும்கட்சி அட்ராசிட்டி’, ‘எச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு’ ஆகிய தலைப்புகளில் 17.11.2015, 20.11.2015, 08.12.2015, 11.12.2015 தேதியிட்ட இதழ்களில் எழுதியிருந்தோம். ‘மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!’ எனத் தலைப்பிட்டு 11.12.2015 தேதியிட்ட ஜூவி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இதே கருத்துதான் இப்போது வெளியாகியிருக்கும் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையிலும் இடம்பெற்றிருக்கிறது.

‘சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளுதல்’ என்ற தலைப்பில் தணிக்கைத் துறை அளித்த ரிப்போர்ட் தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘சென்னை பெரு வெள்ளம், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. செம்பரம்பாக்கம் ஏரியில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம்’’ எனக் கண்டறிந்திருக்கிறது தணிக்கைத் துறை.

மிக விரிவாகத் தோலுரித்துக் காட்டிய தணிக்கை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்...

சட்டங்களையும் பெரும் திட்டங்களையும், பயன் இல்லாத வகையில் அமல்படுத்தியதால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு, அதன்மூலம் வெள்ளத்துக்கு வழிவகை செய்யப்பட்டது.

ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைச் சீரமைத்து, கொள்ளளவை உயர்த்தும் நடவடிக்கைகளை அரசு சரியாகச் செய்யவில்லை.

கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்புகள், வெள்ளநீரின் ஓட்டத்தைத் தடுத்து, பல பகுதிகளை நீரில் மூழ்கடித்தன.

தூர்வாருதல், சிறு வடிகால்களைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள்கூட திட்டமிட்டபடிச் செய்து முடிக்கப்படவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் பல பகுதிகளில் இல்லை.

பெரும் மழைக்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கு வெள்ளம் பாதித்த பகுதிகளின் வரைபடங்கள், அணைகளுக்கான அவசரக்கால செயல்திட்டம் ஆகியவை உருவாக்கப்படவில்லை.

‘நீர்வழிகளின் கரைகளிலிருந்து 15 மீட்டர் தொலைவுக்கு ஓர் இடைத்தாங்கு மண்டலத்தைப் பராமரிக்க வேண்டும்’ என விதிகளில் இருந்தாலும், சி.எம்.டி.ஏ நீர்வழிகளை ஒட்டிக் கட்டுமானங்களை முறைப்படுத்துவதற்காக வெள்ளத் தாழ்நிலங்களை வரையறை செய்யவில்லை. இதனால் வெள்ளநீரின் எளிதான ஓட்டத்தைத் தடுக்கும் வகையில், ஆறுகளின் கரைகளில் பெரிய கட்டடங்கள் உருவாகின.

வேளாண்மை, திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு நிலப் பயன்பாட்டை மாற்றுவதன் மூலம் கட்டுமானங்களைத் தாராளமாக அனுமதித்தது சி.எம்.டி.ஏ. இதனால் அனுமதியற்ற கட்டடங்கள் நீர்நிலைகளைச் சுருக்கி, வெள்ளத்தின்போது பெருமளவு நீர்தேங்குவதற்கு வழிவகுத்தன.

வெள்ளத் தடுப்புக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேல்மடையில் இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கத் தவறிவிட்டார்கள். கொசஸ்தலை ஆற்றுக்குக் குறுக்கே கூடுதல் நீர் சேமிப்பு செய்யும் பணியைச் சரியாகத் திட்டமிடவில்லை.

ஆக்கிரமிப்பிலிருந்து குளங்கள் மற்றும் ஏரிகளைப் பாதுகாப்பதற்கு 2007-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டபோதிலும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வந்தது.

குறைந்த கொள்ளளவு உள்ள மழைநீர் வடிகால்களை சென்னை மாநகராட்சி கட்டியதும் வெள்ளத்துக்குக் காரணம்.

ஆண்டுதோறும் நடைபெறும் தூர்வாரும் பணிகள், 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஆரம்பிக்கப்படவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு, ஏரிக்கு வரக்கூடிய அளவைவிட அதிகமாக இருந்ததால், அடையாற்றில் விடுவிக்கப்பட்ட நீரின் அளவு வரைமுறைப்படுத்தவில்லை. ஏரியில் நீர் முழுக் கொள்ளளவு மட்டத்துக்கு வைக்கப்படவில்லை. 2015 டிசம்பர் 1-ம் தேதி அன்று கரையை ஒட்டிய பகுதியில் சட்டமுரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலத்தை நீரில் மூழ்காமல் பாதுகாக்க விரும்பியதால், மொத்தக் கொள்ளளவான 3.645 டி.எம்.சி-க்கு பதிலாக 3.481 டி.எம்.சி. அளவு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டது.

தணிக்கை அறிக்கை வெளியான நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, அப்போது பதவியில் இருந்த பொதுப்பணித் துறை அமைச்சர் மீது வழக்குபோட முடிவு செய்திருக்கிறார். “அரசு நினைத்திருந்தால், இந்தப் பேரழிவைத் தடுத்திருக்கலாம். இடைவிடாமல் மழைபெய்து, ஏரியும் நிரம்பி வழிந்த நிலையில் மொத்தமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். வானிலை ஆய்வு மையம் அளித்த எச்சரிக்கையையும் ஆட்சியாளர்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை. ஊரையே நாசம் செய்தார்கள். அமைச்சருக்குத் தெரியாமல் அதிகாரிகள் செய்தார்களா, அதிகாரிகளுக்குத் தெரியாமல் அமைச்சர் செய்தாரா என்ற மர்மத்தை, இந்த தணிக்கை அறிக்கையை வைத்து வெளியில் கொண்டுவர வேண்டும். சென்னை மூழ்கியதற்குக் காரணமான அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவேன்’’ என்றார்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ந.பா.சேதுராமன்