Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

விகடன் விமர்சனக்குழு

கம்பேரிஸன் கோவாலு!

பிரீமியம் ஸ்டோரி

‘இனிமேதான் மாடு வாங்கணும், புல்லு போடணும், பால் கறக்கணும். அப்புறம்தான் அது குழந்தைக்கா... கடைக்கா என முடிவு பண்ணணும்’ என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள். அதே சங்கதிதான், அம்பானியின் ஜியோ இன்ஸ்டிட்யூட் விவகாரத்திலும். ‘இல்லாத ஒரு நிறுவனத்துக்குச் சிறப்புச் சலுகைகளா’ என வறுத்தெடுக்கிறார்கள் இணையத்தில். ஆனால், இந்த ஆட்சியில் இதைவிட சிறப்புத் திட்டங்கள் எல்லாம் காணக் கிடைக்குமே!

கம்பேரிஸன் கோவாலு!

‘ஒரு தேர்வு, ஓஹோனு வாழ்க்கை’ எனச் சொல்லித்தான் நீட் தேர்வைக் கொண்டுவந்தார்கள். ஆனால், அதில் கேள்விக்கு ஒரு பஞ்சாயத்து வெடிக்கிறது. எக்ஸாம் நடக்குமிடம் தொடங்கி அட்மிஷன் வரை முழுக்க முழுக்கச் சர்ச்சைகள்; வழக்குகள்; பஞ்சாயத்துகள். இப்போது, ‘வருடத்துக்கு இரு முறை’ என அதில் இன்னொரு புதுமையைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும், நடப்பது நம் ஆட்சி என்பதால் தயங்காமல் ‘உலகின் சிறந்த தேர்வு’ என்ற அந்தஸ்தைக் கொடுக்கலாம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிந்த,  ஜி.எஸ்.டி-யால் பொருளாதாரம் உயர்ந்த, எட்டுவழி பசுமைச்சாலையால் தொழில்துறையும் வளர இருக்கிற மாடர்ன் இந்தியாவுக்கு, ‘உலகின் தலைசிறந்த வல்லரசு’ என்ற பட்டத்தைக் கொடுக்கலாம். வழக்கம் போலப் பேச்சுக்குச் சொல்வதுதானே! காசா, பணமா?

குறள் போன்ற இரண்டடி ஸ்டேட்டஸில் கலகம் வெடிக்க வைக்கிறார். முத்து போன்ற மொழிபெயர்ப்பால் தேசிய அளவில் ட்ரெண்டாகிறார். இத்தனை சிறப்புக்கும் உரிய இலக்கியவாதி      ஹெச்.ராஜாவின் வரவே வராத சங்க இலக்கியக் காவியத்துக்கு, சாகித்ய அகாடமி விருது கொடுக்கலாம். புலிட்சர் விருது, ‘ஆன்டி இந்தியன் விருது’ என்பதால் அன்னார் அதை ஏற்கமாட்டார்!

செய்திகளில் வானிலை அறிக்கை வருகிறதோ, இல்லையோ... ‘தாமரை நிச்சயம் தமிழகத்தில் மலரும்’ என்ற ஸ்டேட்மென்ட் மட்டும் தவறாமல் வருகிறது. தலைவர்களின் வாயில் மட்டும் மலரும்... தமிழகத்தில் மலரவே மலராத அந்த ஆட்சிக்கு ‘பொற்கால ஆட்சி’ என்ற சிறப்பு அந்தஸ்து கொடுத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

கன்னித்தீவை சிந்துபாத் தேட ஆரம்பித்தபோதுதான், அத்வானி ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தார். அத்வானியே ரிட்டயர் ஆனபின்பும் கன்னித்தீவு கிடைத்தபாடில்லை. இப்படி தீராத் தேடலில் இருக்கும் கன்னித்தீவுக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தலம் என்ற சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்தால் சிந்துபாத்தின் முன்னோர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையும்.

ஓவியம்:  பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு