வேலைகள் செய்வதற்காக டெண்டர்கள் விடுவது பழைய ஸ்டைல்... டெண்டர் விடுவதற்காகவே, வேலைகளை உருவாக்குவது புதிய ஸ்டைல்! தமிழக நெடுஞ்சாலைத் துறையில் இந்த ஸ்டைல்தான் இப்போது பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக, ‘ஊழலுக்கான மொத்தக் குத்தகையை எடுத்துள்ள துறையாக நெடுஞ் சாலைத்துறை மாறிவிட்டது’ என்று நீண்டகால மாகக் குமுறிவருகிறார்கள் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள். இப்போது, அதை விடப் பெரிய அபாயம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக நெடுஞ்சாலைத் துறையை விலைபேசி வாங்கிவிடும் முயற்சியில் சத்தமில்லாமல் இறங்கியுள்ளன தனியார் நிறுவனங்கள். பேக்கேஜ் கான்ட்ராக்ட், டெண்டர் எடுப்பதற்கு 30 சதவிகித கமிஷன், டெண்டர் எடுத்தபிறகு 10 சதவிகித கமிஷன், டெண்டர் எடுத்த நிறுவனங்கள் சொல்படி நடக்கும் டிரான்ஸ்பர், சாலைப் பணியாளர்கள் ஒழிப்பு என்பதெல்லாம் பழைய கதைகள்! புதிதாக, சாலை ஆய்வாளர்களையும் ஒழித்துக் கட்டும் சதிக்கு விதைபோடப்பட்டுள்ளது.

எஸ்.பி.கே பேக்கேஜ் கான்ட்ராக்ட்!

தமிழகத்தின் ஐந்து கோட்டங்களில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாநிலச் சாலைகள் மற்றும் மாவட்ட முக்கியச் சாலைகள் அமைக்கும் வேலையை எஸ்.பி.கே நிறுவனம் எடுத்துள்ளது. சாலைகள் அமைப்பதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் எஸ்.பி.கே நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமீபத்தில் தமிழகம் முழுவதும் வருமானவரித் துறை துரத்தித் துரத்தி ரெய்டு நடத்தியது இந்த நிறுவனத்தில்தான். இதன் உரிமையாளர்தான் செய்யாத்துரை! இத்தனை சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த நிறுவனம், தற்போது விருதுநகர் கோட்டத்தில் இந்த வேலையை எடுத்துள்ளது. இந்தப் பணிகளைச் செய்ய 560 கோடி ரூபாயை அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர், திருவள்ளூர் உள்பட முதல் நான்கு கோட்டங்களில் வேலையை முடித்து, விருதுநகர் கோட்டத்தில் கடைசியாக எஸ்.பி.கே நிறுவனம் வேலையைத் தொடங்கியுள்ளது. முதல் நான்கு கோட்டங்களில் சாலை ஆய்வாளர்கள் (Road Inspector) வேண்டாம் என்று சொல்லாத எஸ்.பி.கே நிறுவனம், விருதுநகர் கோட்டத்தில் தங்களுக்கு அரசாங்கத்தின் சாலை ஆய்வாளர்கள் வேண்டாம் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளது.

சாலை ஆய்வாளர்கள் வேண்டாம்!

எஸ்.பி.கே நிறுவனத்தின் விருப்பப்படி, விருதுநகர் கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தி, ‘‘இங்கு நடக்கும் சாலைப் பணிகளை, சாலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டாம்” என வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சாலைப் பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் சென்று அவரிடம் கேட்டபோது, “இதர மாவட்டச் சாலைப் பணிகளிலிருந்துதான் சாலை ஆய்வாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது; அதனால், நீங்கள் அந்தப் பணிகளை மட்டும் பாருங்கள்” என ஒரு விதிமுறையைக் காரணம் காட்டித் தடை போட்டுள்ளார். இதையடுத்து சில சாலை ஆய்வாளர்கள், “நீங்கள் இதை எழுத்துப்பூர்வ உத்தரவாகக் கொடுங்கள்” என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து சென்னை வந்த அவர்கள், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சாந்தியைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். அதைக்கேட்ட அவர், ‘‘தனியார் நிறுவனம் அமைக்கும் சாலைகளை அரசாங்கத்தின் சார்பில் நீங்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று உறுதி கொடுத்துள்ளார்.

ஏன் சாலை ஆய்வாளர்கள் வேண்டும்?

சாலை ஆய்வாளர்களின் பணி என்பது, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் சாலைகளையும், அங்கு நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்யும் பணி. உதாரணமாக, சாலை அமைக்கும் பணிகளின்போது ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அந்த இயந்திரம் ஒரு மணி நேரம் இயங்கினால், அதற்கு 800 ரூபாய் என்ற அளவில் அரசாங்கம் கணக்கிடுகிறது. அப்படிப் பயன்படுத்தப்படும் ஜே.சி.பி இயந்திரம், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் இயங்கியது என்பதைக் கண்காணிப்பது, சாலையின் தடிமன் எவ்வளவு, எவ்வளவு தார் பயன்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் கண்காணித்து, அளவீடு செய்து அறிக்கை கொடுப்பவர்கள் சாலை ஆய்வாளர்கள். இவர்களை ஒழித்துவிட்டால், நான்கு மணி நேரம் ஜே.சி.பி இயந்திரத்தை இயக்கிவிட்டு, அதை 10 மணி நேரம் இயக்கியதாகக் கூடக் கணக்குக் காட்டலாம். அதன்மூலம் செலவைக் குறைக்கலாம். இதற்காகத்தான் தனியார் நிறுவனங்கள் தங்கள் வேலைகளை, ‘அரசாங்கத்தின் சார்பில் கண்காணிக்கும் சாலை ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டாம்’ என்கின்றன.

அரசு வருவாய்க்கு வேட்டு!

சாலைப்பணிகளைக் கண்காணிப்பது ஒரு பக்கம்; மற்றொருபுறம், சாலை அமைக்கும்போது அந்த வழியில் குறுக்கிடும் பாசனக்குழாய்கள், தனியார் இன்டர்நெட் சேவை நிறுவனங்களின் பைப் லைன்கள், டெலிபோன் லைன்கள் எங்கு போகின்றன, எவ்வளவு தூரம் போகின்றன என்பதைக் கண்காணித்து, அதற்கான தொகையைச் சம்பந்தப்பட்ட விவசாயிகள், நிறுவனங்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைப்பதும் இந்தச் சாலை ஆய்வாளர்களின் பணிதான். அவர்களைத் தடுப்பதன் மூலம், அந்தத் தொகையையும் அரசுக்கு வரவிடாமல் செய்ய சிலர் திட்டமிடுகின்றனர். அதற்காகத்தான் சாலை ஆய்வாளர்களை ஒழிப்பதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றன.

பறிபோகும் அரசு சொத்துகள்!

நெடுஞ்சாலைத் துறைக்கு மாநிலம் முழுவதும் பல இடங்களும் கட்டடங்களும் உள்ளன. அவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய். நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனங்கள், வேலை முடியும்வரை அந்த இடங்களையும் கட்டடங்களையும் பயன்படுத்தும். சில இடங்களில் வேலை முடிந்தபிறகும் அந்தக் கட்டடங்களையும் காலி செய்யாது. அப்படி பல கோட்டங்களில் பல இடங்கள் பறிபோயுள்ளன. சாலை ஆய்வாளர்கள் இருக்கும்போதே அப்படிப் பறிபோன விஷயங்கள் நடந்துள்ளன. இப்போது சாலை ஆய்வாளர்களும் இல்லையென்றால், அதையெல்லாம் கேள்வியே கேட்க முடியாது. ஒரு தலைமுறை பணியாளர்களுக்குத் அது தெரியாமல் போனால், அதன்பிறகு அது யாருக்கும் தெரியாமல் போய்விடும்.

இதுபற்றி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரிமுத்துவிடம் கேட்டோம். “நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். இப்போது ஆய்வாளர்களை ஒழிக்கும் வேலையைத் தனியார் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இதுபற்றி, விருதுநகர் கோட்டப் பொறியாளரிடம் முறையிட்டோம். அவர், தனியார் நிறுவனத்தின் விதிமுறைகளைக் காரணம்காட்டினார். ‘இளநிலைப் பொறியாளரும் உதவிக் கோட்டப் பொறியாளரும் அந்த வேலைகளைப் பார்த்துக்கொள்வார்கள்’ என்றார். அது சாத்தியமில்லாத விஷயம். 200 கி.மீ நீளத்துக்குச் சாலை அமைக்கும்போது, அதை அந்தந்தப் பகுதி சாலை ஆய்வாளர்கள் பார்த்து ஆய்வு செய்வார்கள். பல ஆய்வாளர்கள் செய்யும் வேலையை, சில பொறியாளர்களால் கண்காணிக்க முடியாது. அப்படி நடக்கும்போது, அதில் பல முறைகேடுகள் நடக்கும். அதை நாங்கள் எடுத்துச் சொன்னோம். ஆனால், கோட்டப்பொறியாளர் அதைக் கேட்கவில்லை. எனவே, தலைமைப் பொறியாளரிடம் நாங்கள் முறையிட்டோம். இதையடுத்து தற்போது கோட்டப் பொறியாளரும் இறங்கி வந்துள்ளார். முதலில் ‘தலையிடக்கூடாது’ என்பதை எப்படி வாய்மொழி உத்தரவாகப் பிறப்பித்தாரோ... அதேபோல் இப்போது ‘தனியார் நிறுவனம் செய்யும் வேலைகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்’ என்பதையும் வாய்மொழியாகவே உறுதிப்படுத்தி உள்ளார்.

இப்போதைக்கு அவர் அப்படிச் சொல்லியிருந் தாலும், சாலை ஆய்வாளர்கள் என்ற பணியிடத்தை ஒழிப்பதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன என்றுதான் கருதுகிறோம். அதனால், வேலை தொடங்கி நடக்கும்போது நிலைமை மாறலாம். இதுபற்றி முதல்வர், துறை செயலாளர் உள்பட பலருக்கும் இந்த முறையீட்டைக் கடிதமாகவும் அனுப்பியுள்ளோம். நடவடிக்கை இல்லையென்றால், நீதிமன்றத்தை நாடுவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்றார்.

இப்படியே போனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலைத் துறையைத் தனியார் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

- ஜோ.ஸ்டாலின்
படம்: வீ.நாகமணி