Published:Updated:

சரப்ஜித்சிங் விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு தோல்வியா?: சல்மான் குர்ஷித் மறுப்பு

புதுடெல்லி: சரப்ஜித்சிங்கின் இறப்பினால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாக கூற முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சரப்ஜித் விவகாரத்தை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள், சரப்ஜித் சிங் மரணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியை காட்டுவதாக உள்ளது என குற்றம் சாட்டினர்.

##~~##
இந்நிலையில் இதுகுறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் பார்க்க வில்லை என்றும், பா.ஜனதா இதனை அரசியலாக்கும் நேரம் இதுவல்ல என்றும் கூறினார்.