Published:Updated:

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!
குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2QCqieM

`குட்கா ஊழல் விவகாரத்தில் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இல்லாவிட்டால், சட்டம் தன் கடமையைக் கடுமையாகவே செய்யும்' என்று டெல்லியிலிருந்து அழுத்தம் வந்துள்ளது...

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

...விஜயபாஸ்கருக்கு  உதவியாளராக எப்படி வந்தீர்கள், கல்லூரியில் பணியாற்றியபோது உங்களின் சொத்து மதிப்பு என்ன என்றெல்லாம் கேட்டுள்ளனர். `இல்லை', `தெரியாது' என்று மட்டுமே சொல்லியுள்ளார். உடனே அதிகாரிகள், ஒரு பெண் விவகாரம் குறித்தும், அந்தப் பெண்ணுடன் இவர் பேசிய விவரங்களையும் ஆதாரங்களுடன் காட்டினர். சரவணன், அதன் பின்பு பல விஷயங்களைக் கொட்டியுள்ளார்... 

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

- குட்கா ஊழல் விவகாரத்தின் பின்னணியையும், விசாரணையின் போது நடந்தவை மட்டுமன்றி, இதையொட்டிய அரசியல் நகர்வுகளையும் அப்பட்டமாக கண்முன் காட்டுகிறார் மிஸ்டர் கழுகு: `தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்!' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள வெளிவராத தகவல்களைத் தவறவிடாதீர்கள்.

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

``ஞாயிறு அன்று விழாவுக்கு ராகுல் வரும் தகவல் முந்தைய நாள்தான், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியவந்தது. வேகவேகமாக, தமிழகம் முழுவதும் நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்து, சென்னைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போதும்கூட, ஸ்டாலினின் `பிரதமர் வேட்பாளர்' அறிவிப்பு குறித்து, காங்கிரஸின் தமிழகத் தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. குறிப்பாக, ப.சிதம்பரம் மேடையில் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ஸ்டாலின் இதை அறிவித்ததும் கிட்டத்தட்ட அதிர்ந்துவிட்டார்...” 

- தன் பயணத் திட்டத்திலேயே இல்லாத கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி உற்சாகமாகக் கிளம்பியதன் பின்னணியைச் சொல்கிறது `கிங் மேக்கர் ஸ்டாலின்? - ராகுல் சர்ப்பிரைஸ் விசிட் ரகசியம்..!' எனும் அரசியல் அலசல் கட்டுரை.

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் டிசம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்துக்கொண்டு நாடு முழுக்க 90-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரஸ் மீட் நடத்திய பி.ஜே.பி., `இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசுமீது தேவையற்ற அவதூறுகளைப் பரப்புகிறார்கள்' எனக் குற்றம் சாட்டியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், இதேபோல `தேசபக்தி தீர்ப்பாக' இருக்க, பி.ஜே.பி மீண்டும் இறங்கிவந்து அடிக்கிறது. சமீப காலங்களில் பல தீர்ப்புகள் சர்ச்சைக்குள்ளானது போலவே, ரஃபேல் தீர்ப்பும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏன் இந்தச் சர்ச்சை? இதன்மூலம் காங்கிரஸும் பி.ஜே.பி-யும் என்ன பலன்களை அடைய நினைக்கின்றன?

- ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், பாஜக - காங்கிரஸின் அடுத்தகட்ட வியூகங்களையும் விரிவாகக் கூறுகிறது 'ரஃபேல் விவகாரம்... அடுத்த தேர்தலுக்கும் ஆயுதம் இதுதான்!' எனும் அலசல்.

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2QCqieM

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

``என் இளைய பொண்ணு நர்ஸுக்குப் படிச்சுட்டு, ஒரு மெடிக்கல்ல வேலை பார்த்திட்டுருந்தா. போன அக்டோபர் மாசம் 28-ம் தேதி அன்னைக்கு வேலைக்குப் போனவ, ராத்திரி ஆகியும் வீடு திரும்பலை. ரெண்டு நாள் கழிச்சு மல்லிப்பட்டினம் ஆத்துப் பாலத்தில் சாக்குமூட்டையில் பிணமாத்தான் அவளைப் பார்க்க முடிஞ்சது. நாகராஜ் என்பவன் என் மகளைக் கெடுத்து, கொலை செஞ்சிருக்கிறான். அவனை ஜெயில்ல போட்டாங்க. கூடவே ஆறு பேர் மேல வழக்கும் போட்டாங்க. ஆனாலும், நாகராஜ் குடும்பத்தினர் சாதி, அரசியல் பலம் மிக்கவங்க. `நாங்க பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க. எங்கள் பசங்களையே ஜெயில்ல அடைச்சிட்டியா... எப்படி உசுரோட நீ இருந்துட றன்னு பார்த்திடறோம்'ன்னு தினமும் கொலை மிரட்டல் விடுறாங்க. ஊருல தலைகாட்டவே முடியலை” என்று கதறி அழுதார்...

- கிராமங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கியக் காரணமாக சாதிய ஆதிக்கம் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் உறவுகள் முன்வந்து சொன்ன சமூகக் கொடுமைகளைக் காட்டுகிறது `சாதி கொன்ற நீதி! - சாட்சிகள் இதோ...' எனும் செய்திக் கட்டுரை.

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

நாகை மாவட்டத்தில், 2009-ம் ஆண்டு குளத்தில் மூழ்கிய பள்ளிக் குழந்தைகள் 12 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, தன் உயிரைத் தியாகம் செய்த ஆசிரியர் சுகந்தியை நினைவு இருக்கிறதா? எப்படி அவரை மறக்க முடியும் என்கிறீர்களா? ஆனால், தமிழக அரசு அவரது குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டது. அரசு உறுதியளித்த உதவிகள்கூட கிடைக்காமல் நிர்க்கதியாய் தவிக்கிறது சுகந்தியின் குடும்பம். இதுதான் அவரது தியாகத்துக்குக் காட்டும் நன்றியா?

- சில பல கேள்விகளுடன் சுகந்தியின் குடும்பத்தின் நிலையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது `கண்டுகொள்ளப்படாத தியாகம்! - தியாகத்துக்கு மரியாதை செய்ய நாம் தவறக் கூடாது' எனும் கலங்கடிக்கும் செய்திக் கட்டுரை.

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் வழக்கறிஞர் பார்த்தசாரதி. விசாரணையின்போது, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டியவர். இவர், திடீரென்று ஆணையத்திலிருந்து கடந்த 14-ம் தேதி ராஜினாமா செய்துவிட்டார். `அரசியல் அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகினார்' என்கிறார்கள் ஆணையத்தின் ஊழியர்கள்...

"...ஜெயலலிதாவின் மருத்துவச் சிகிச்சையில் விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பதை வெளிக்கொண்டுவருவதில் முனைப்புடன் செயல்பட்டவர் பார்த்தசாரதி. சிகிச்சை முறைகளில், `திட்டமிட்டு இது நடந்திருக்குமா?' என்ற கோணத்தில் தனிப்பட்ட முறையில் மருத்துவர்களிடமும் விளக்கம் கேட்டார். அப்போது ஒரு மருத்துவர் `இதய முடக்கம் ஏற்படும் அளவுக்கு ஜெயலலிதாவின் ரத்தத்தில் பொட்டாஷியம் அளவு கூடியிருக்கிறது' என்று  தெரிவித்திருக்கிறார்..." 

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2QCqieM

- வழக்கறிஞர் பார்த்தசாரதியின் ராஜினாமா பின்னணியும், அவரது பேட்டியும் நமக்குச் சொல்லும் சேதி ஏராளம். `ஜெயலலிதாவுக்குக் கொடுத்த காபியில் பொட்டாஷியம்? - கேள்வி கேட்ட வழக்கறிஞர் ராஜினாமா...' எனும் செய்திக் கட்டுரை முக்கியமானது.

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தைத் தொடர்ந்து, பிறவம் தேவாலயப் பிரச்னை, கேரள அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது... பாரம்பர்யம் வாய்ந்த இந்த சர்ச்சில்தான், நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கு இரு பிரிவினர் இடையே பிரச்னை... 

சபரிமலையில் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த தீவிர முயற்சி எடுக்கும் கேரள அரசு, பிறவம் சர்ச் விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது... - இந்த சர்ச்சையின் பின்னணியைச் சொல்கிறது, `சர்ச்சை மட்டும் மீட்கிறாரா? சர்ச்சையில் பினராயி!' எனும் செய்திக் கட்டுரை.

குட்கா to `கஜா முறைகேடு: 4 நிமிடத்தில் ஜூனியர் விகடனின் 8 அம்சங்கள்!

பொதுமக்களின் வேதனையையும், கண்ணீரையும் துடைக்க வேண்டிய அரசு, அவர்களின் துயரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தில் பேக்கிங் பணியில் பெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. - இதுகுறித்த விரிவான தகவல்களைத் தருகிறது ``நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!” - கஜா நிவாரண பேக்கிங் முறைகேடு
எனும் செய்திக் கட்டுரை.

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2PNj4j0

அடுத்த கட்டுரைக்கு