Published:Updated:

தன்மானம் அவமானம் வெகுமானம்

தன்மானம் அவமானம் வெகுமானம்
பிரீமியம் ஸ்டோரி
தன்மானம் அவமானம் வெகுமானம்

பகிர்வு - 1

தன்மானம் அவமானம் வெகுமானம்

பகிர்வு - 1

Published:Updated:
தன்மானம் அவமானம் வெகுமானம்
பிரீமியம் ஸ்டோரி
தன்மானம் அவமானம் வெகுமானம்

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த, கண்ணீரும் புன்னகையும் கலந்த சம்பவங்களைப் பகிரும் பகுதி இது. இந்த வாரம் குஷ்பு.

தன்மானம் 

தன்மானம் அவமானம் வெகுமானம்

``சின்ன வயசுலேயே எனக்கு என் அம்மா, தன்மானத்தின் அவசியத்தைச் சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்தச் சுயமரியாதை உணர்வு என் ரத்தத்தில் ஊறியிருக்கு. சினிமாவிலும் அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எத்தனையோ சவால்களைச் சந்திக்க, வேதனைகளை வெற்றிகொள்ள என்னுடைய தன்மான உணர்வுதான் உதவியிருக்கு.

‘வருஷம் 16’ குஷ்புவை உங்களுக்குத் தெரியும். அதே 16 வயது குஷ்புவின் காயமும் கண்ணீரும் இந்த உலகம் அறியாதது. ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’னு சொல்வாங்க. என் சிக்ஸ்டீன், ஸ்வீட்டா இல்லை. என் 16 வயசுலதான் என் அப்பா எங்க குடும்பத்தை நிர்கதியா விட்டுட்டுப் போயிட்டார். ‘திரும்ப வந்தாலும் அவரை வீட்டில் சேர்க்கக்கூடாது’ங்கிறதில் உறுதியா இருந்தேன். 32 வருஷம் ஆச்சு, அதுக்கப்புறம், என் அப்பாவின் முகத்தை நான் பார்க்கவேயில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்மானம் அவமானம் வெகுமானம்

என்னோட முதல் தெலுங்குப்பட ஷூட்டிங் இறுதிக்காட்சி ஒகேனக்கலில் படமாக்கப்பட்டுச்சு. அங்கே இருந்த கெஸ்ட் ஹவுஸ் மாடியில் இருக்கும் என் அறைக்குப் போய்க்கிட்டிருந்தேன். மாடியில் ஏறும்போது, அந்த ஊர்ப்பையன் வேண்டுமென்றே   என்னைத் தொட்டான். படார்னு கோபம் வந்துடுச்சு. கொஞ்சம்கூட யோசிக்கலை. `பளார்’னு நான் விட்ட அறையில அவன் படிக்கட்டில் தடுக்கி விழுந்துட்டான். எழுந்துபோனவன், அந்த ஊர்ல இருக்கிறவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்துட்டான். நான் மன்னிப்பு கேட்டே ஆகணும்னு ஒரே கூச்சல்!

கோபமுள்ள, நியாயம் இல்லாத அந்தக் கூட்டத்தைச் சந்திக்க, இறங்கி கோபமாப் போனேன். அது எனக்கு முதல்படம். யூனிட்ல இருக்கறவங்க என்னைப் போகவேண்டாம்னு தடுத்தாங்க. நான் கேட்கலை. கூட்டத்துக்கு முன்னாடி போய் தைரியமா நின்னேன். நீங்க மனசுல தைரியத்தோட, அநீதியான ஒரு விஷயத்தை எதிர்த்து நிற்கும்போது எதிர்ல இருக்கறது எவ்வளவு பெரிய கூட்டமா இருந்தாலும் அடங்கிப்போகும். அப்படித்தான் அன்னைக்கும் நடந்தது. மன்னிப்பு கேட்கணும்னு கூச்சல் போட்ட கூட்டத்துகிட்ட ‘என்மீது எந்தத் தப்பும் இல்லை. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். எங்கள் யூனிட்டில் இருக்கும் ஒரு ஆண் உங்கள் வீட்டில் இருக்கும்  பெண்ணைத் தொட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள், விருந்தா போடுவீர்கள்?’னு  கோபமாக் கேட்டேன். என் கேள்வியில் இருந்த நியாயத்துக்கு முன்னால அவங்க நிற்க முடியலை. கலைஞ்சு போய்ட்டாங்க. நம்மை எதிர்ப்பது எவ்வளவு பெரிய கூட்டமா இருந்தாலும் சரி, தன்மானமும் போராட்டக்குணமும் அதற்கான நியாயங்களும் நம்ம பக்கம் இருந்தா யாரை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம்; எத்தனைபேரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம். இதுக்கான உதாரணங்கள் என் வாழ்க்கையில் நிறைய நடந்திருக்கிறதை, இந்தத் தமிழ்மண் நேரடியாகவே பார்த்திருக்கு!

அவமானம்

அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக்கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கத்துக்கொடுக்காது. அதிலும் சினிமாவில் புதுமுகமா ஒரு பொண்ணு அறிமுகமாகும்போது படும் அவமானங்களைப் பக்கம் பக்கமா எழுதலாம். எனக்கு அவமானம் வீட்டிலேயே ஆரம்பிச்சுடுச்சு... என் 16 வயசுல அப்பா தினமும் வீட்டுல சண்டை போடுவார். அப்போ நான் தெலுங்குப்படங்கள்ல நடிச்சுட்டிருந்தேன். மைனரா இருந்ததால வங்கிக்கணக்கு என் பேரில் இல்லை. வரவு செலவெல்லாம் அப்பாதான். ஒருநாள், மூணு அண்ணன்கள், அம்மா எல்லாரையும் விட்டுட்டு சேமிப்பு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய்ட்டார். அதுகூடப் பரவாயில்லை. தெலுங்குல நான் நடிச்சிட்டிருந்த ரெண்டு மூணு படத் தயாரிப்பாளர்களைப் பார்த்து ‘பாக்கிப் பணம் கொடுத்தாதான் அவ நடிப்பா’னு சொல்லி எல்லாப் பணத்தையும் வாங்கிட்டுப் போய்ட்டார். வீட்டுல சாப்பிடக்கூட எதுவும் இருக்காது. மதியம் ஷூட்டிங்ல சாப்பிட்டுட்டு நைட் ஒண்ணுமே சாப்பிடாம தூங்கின நாள்கள் ஏராளம். இப்போ நான் சாப்பிடற ஒவ்வொரு சாப்பாட்டிலும், அந்தப் பட்டினி நாள்களின் ஈரம் கலந்திருக்கும். 

தன்மானம் அவமானம் வெகுமானம்

ஒரு தெலுங்குப் படத்துல இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்.  இன்னொரு ஹீரோயின் பிரபல நடிகை. அப்பல்லாம் கேரவன் கிடையாது. இரண்டே அறைகள்தான். ஒரு அறையில ஹீரோவும், வில்லனும் டிரஸ் மாத்திப்பாங்க. எனக்கும் அந்தத் தெலுங்கு நடிகைக்கும் ஒரே அறை. நான் போனப்ப அந்த நாயகியோட அம்மா என்னைத் தடுத்து நிறுத்தினாங்க. ‘என் மகளும் நீயும் ஒண்ணா? அவ எவ்வளவு பெரிய ஹீரோயின் தெரியுமா?’னு ஆரம்பிச்சு என்னவெல்லாமோ பேசினாங்க. நான் அவமானத்தின் உச்சியில் நின்ற நாள் அது. ஒருவழியா அதையெல்லாம் சமாளிச்சு, நடிச்சு முடிச்சேன்.

‘வருஷம் 16’ படம் எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது. சிறந்த நடிகை விருது கிடைக்கும்னு நிறைய பேர் சொன்னாங்க. மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைக்கலைங்கறதை விடுங்க. சின்னச்சின்ன அமைப்புகளின் விருதுகூட அதுக்குக் கிடைக்கல. அதை அவமானமாதான் உணர்ந்து ரொம்ப அப்செட்டா இருந்தேன். அந்தப் படம் முடிஞ்சதும் எனக்கு சினிமாவில நிலையான ஒரு இடம் வந்துடுச்சுனு நம்பிக்கையோட இருந்தேன். ஆனா 1990-ல ஒரே நாள்ல 5 பெரிய ஹீரோக்கள் படங்கள்ல இருந்து என்னை நீக்கினாங்க. எல்லாமே பெரிய இயக்குநர்கள். மன உளைச்சலில் உழன்று, சினிமா நிகழ்ச்சிகள்ல தலைகாட்டுறதைத் தவிர்த்தேன். ஆனாலும் நிராகரிப்பு நிறைந்த அந்த நாள்களைத் தாண்டிவந்து, மறுபடியும் என்னை நிரூபிச்சேன்.

தன்மானம் அவமானம் வெகுமானம் அதேபோல அரசியல்ல கால் வெச்சதும், சில அரசியல்வாதிகள் நடிகைகள் பற்றி வெச்சிருக்கற மதிப்பீட்டைப் பார்த்து அவ்வளவு அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. ‘கேவலம், நடிகைதானே, சமூகத்தைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்?’னு பேசுவாங்க. ஒருவர் யாராக வேண்டு மானாலும் இருக்கலாம், அவங்களிடம் தகுதி இருக்கா, அர்ப்பணிப்பு இருக்கான்னு தானே பார்க்கணும்?

 சிலபேர்  நடிகை என்றாலே வேறு ஓர் அபிப்ராயம் வைத்திருக்கி றார்கள். பொதுவாழ்க்கைக்கு வரும் ஒரு ஆணையும் பெண்ணையும் சமூகம் சமமாகப் பார்ப்பதில்லை. இந்தப் பார்வையை மாத்துறதும் பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்களோட கடமைகளில் ஒண்ணு!

வெகுமானம்

 அவமானங்களைத் தன்மானத்தோடு எதிர்கொள்வதே வெகுமானம்தான் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு உதாரணம். தமிழில் பிரபு, தெலுங்கில் வெங்கடேஷ், கன்னடத்தில் ரவிச்சந்திரன்னு டாப் ஹீரோக்கள் படத்திலதான் நான் கதாநாயகியா அறிமுகமானேன். 

தன்மானம் அவமானம் வெகுமானம்

கிளாமர் வேடம், நகைச்சுவை வேடம்னு பண்ணிட்டிருந்த எனக்கு `சின்னத்தம்பி’ முக்கியமான படம். அதுதான் என்னை முழுமையான நடிகையா அங்கீகரிக்க வெச்சது. அதுல ‘நீ எங்கே என் அன்பே’ பாடலைப் படமாக்கும்போது என் அண்ணன் வந்தார். “என்ன இந்தப் படத்துல அவார்டு வாங்கிடணும்னு முடிவு பண்ணிட்டு நடிக்கற போல?” அப்டினு கேட்டார். உண்மையாகவே தமிழக அரசின் விருது கிடைச்சது.

`கொண்டையில் தாழம்பூ... கூடையில் என்ன பூ குஷ்பூ’ என்று எனக்காகப் பாடல் எழுதப்பட்டது.  எனக்குக் கோயில் கட்டக்கூட தமிழக ரசிகர்கள் தயாரானார்கள். அதெல்லாம் அதீத அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும், அந்த அன்புதான் எனக்குக் கிடைத்த பெரிய வெகுமானமா நினைக்கிறேன்.

2010-ல் அரசியலுக்கு வந்தேன். தி.மு.க-வில் சேரும்போது தலைவர் கலைஞர், தளபதி.ஸ்டாலின் முன்னிலை யில்தான் கட்சியில் சேர்ந்தேன். அங்கே எனக்கு நல்ல மரியாதை இருந்தது அதேபோல காங்கிரஸில் சேரும்போது  அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை டெல்லிக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கே சோனியா காந்தி முன்னிலையில்தான் காங்கிரஸில் சேர்ந்தேன். அந்தத் தலைவர்கள் என்னை  வெறும் நடிகையாகப் பார்க்கவில்லை. `எத்தனை பேருக்கு இந்தமாதிரி வாய்ப்பு கிடைக்கும்?’னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.  

என் அப்பாவால் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமோ என்னமோ, ஆண் குழந்தை வேண்டாம்,  பெண்குழந்தைதான் எனக்குப் பிறக்கணும்னு நெனைச்சிருந்தேன். அதேபோலவே இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தாங்க. அவங்களை என் வாழ்க்கையின் வெகுமானமாவே பார்க்கிறேன்.

என் வாழ்க்கையில் நானே கத்துக்க ஏராளமான விஷயங்கள் இருக்குங்கிறதே ஒரு வெகுமானம்தானே!”

எம்.குணா - படங்கள்: க.பாலாஜி

ஓவியம்: பிரேம் டாவின்ஸி