Published:Updated:

"பிளட் பேங்குக்கும் மருத்துவமனைக்கும் தொடர்பில்லை..." எழும்பூர் மருத்துவமனையின் அவலம்

"பிளட் பேங்குக்கும் மருத்துவமனைக்கும் தொடர்பில்லை..." எழும்பூர் மருத்துவமனையின் அவலம்
"பிளட் பேங்குக்கும் மருத்துவமனைக்கும் தொடர்பில்லை..." எழும்பூர் மருத்துவமனையின் அவலம்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பரவிய ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துமனைகளின் மீது பொது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனை செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதைக் கண்காணிக்க எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு விசிட் செய்தோம். 

அப்போது மருத்துவமனையில் இயங்கும் ரத்த தான வங்கியின் செயல்பாடு (blood bank) குறித்து விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரத்த தான வங்கியில் ரத்த தான ஆலோசகர் இருக்க வேண்டும. இந்த ஆலோசகர்தான் ரத்த தான வங்கிக்கு வரும் கொடையாளர்களிடம் முழுமையாக விசாரணை செய்து அதன் பின்னரே ரத்தம் பெற அனுமதி வழங்குவார். ஆனால், இந்த எழும்பூர் மருத்துவமனையில் ஆலோசனை கொடுக்கவோ அல்லது விசாரிக்கவோ ரத்த தான ஆலோசகர் இல்லை என்கிறார்கள் நோயாளிகள். அந்த ரத்த தானத்தைச் சேமிக்கும் பணியை அங்குள்ள பணியாளர்கள் மீது வைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தியிடம் பேசியபோது,``தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் மொத்தம் 89 ரத்ததான வங்கிகள் உள்ளன. இந்த ரத்தான வங்கியின் முழுமையான கன்ட்ரோல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில்தான் இயங்குகிறது. பணியாளர்கள் மற்றும் சம்பளம் போன்றவற்றைக் கவனிப்பது முழுவதும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு மையம் ஆகும். எனவே, மருத்துவமனைக்கும், ரத்த தான வங்கிகளுக்கும் தொடர்பில்லை.

மேலும் நாங்களே எங்களது பணியாளர்களை வைத்து ரத்த தான வங்கியில் உள்ள வேலைகளையும் பார்க்கிறோம். இது தொடர்பாகத் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு மையத்துக்கு பலமுறை தெரிவித்துவிட்டோம். எனவே, ரத்த தான வங்கியின் செயல்பாடுகள், பணியாளர்கள் போன்ற விவரங்களைக் கேட்க வேண்டும் என்றால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு மைய திட்ட இயக்குநரைத்தான் நீங்கள்  தொடர்புகொள்ள வேண்டும்" என்று அதிர வைத்தார்.