Published:Updated:

திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின் பயப்படுகிறார் - ஓ. எஸ். மணியன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின் பயப்படுகிறார் - ஓ. எஸ். மணியன் விமர்சனம்
திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின் பயப்படுகிறார் - ஓ. எஸ். மணியன் விமர்சனம்

நாகையில் நடந்த' தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட,தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ .எஸ். மணியன் "திருவாரூர்  இடைத் தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின் பயப்படுகிறார்" என்று விமர்சித்தார்.

நாகை மாவட்டத்தில் 4,61,981 குடும்ப அட்டைதாரர்களுக்கு, வேட்டி-சேலை, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்களோடு, ரூபாய் 1000 சிறப்புப்  பரிசையும்  வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர்  ஓ.எஸ்.மணியன். அப்போது அவர் பேசுகையில், " கஜா புயலால்  பாதிக்கப்பட்ட மக்களின் உயிரோடு சில சமூகவிரோதிகள் விளையாடிவிட்டனர். இதில் எதிர்க்கட்சியினரின் அரசியல் தூண்டுதலும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்களை உடனே வழங்க விடாமல் தடுத்து, சாலை மறியல் போராட்டம் செய்தனர். அரசின் வாகனங்களை அடித்து உடைத்தனர். இதில் ஈடுபட்ட சமூகவிரோதிகளை, காவல்துறை கைது செய்யும் வரை விடமாட்டோம்.

அம்மா ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.100 தந்தார்கள். அம்மாவின் ஆசிர்வாதத்தால் நடைபெறும் தற்போதைய ஆட்சியில் ரூபாய் 1000 வழங்குகிறோம் .மேலும் கஜா புயலால்  பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன. இதனையெல்லாம் கண்டு திமுக பயப்படுகிறது .திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க ஸ்டாலின் பயப்படுகிறார். எனவேதான்  திமுகவின் தோழமைக் கட்சியான கம்யூனிஸ்ட் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகி, இடைத்தேர்தலை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்கிறார்.  ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பின் ,முதன் முதலாக எதிர்கொள்ளும் ஒரு தொகுதி தேர்தலையே  சந்திக்க முடியாமல் பயப்படுகிறார். தினகரன் கட்சி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எப்போது  திருவாரூரில் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க .அமோக வெற்றி பெறும்" என்றார்.