Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநராவாரா ரீனா மித்ரா?

இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநராவாரா ரீனா மித்ரா?
இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநராவாரா ரீனா மித்ரா?

மத்தியப்பிரதேச கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரீனா மித்ரா, இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநர் என்ற பெருமையைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநராவாரா ரீனா மித்ரா?
இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநராவாரா ரீனா மித்ரா?

நாளை (24.1.19) வியாழக்கிழமை  அறிவிக்கப்பட உள்ள சிபிஐ இயக்குநர் பதவிக்கான, 12 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் ரீனா மித்ரா இடம்பிடித்துள்ளார். இவரது சொந்த மாநிலம் மேற்கு வங்கமாகும். தனது முதுகலைப் பட்டத்தை கல்கத்தா யுனிவர்சிட்டியிலும், எம்.ஃபில் படிப்பை மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலும் முடித்திருப்பதால், இவர் தேர்வுசெய்யப்பட்டால் நாமும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். 

இந்த 12 பேர் இறுதிப்பட்டியலில், பிரதமருக்கு நெருக்கமான அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள். எனினும், ரீனா மித்ராவைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் சிபிஐ அமைப்பில் மத்திய அரசின் தலையீடு இருப்பதான குற்றச்சாட்டிலிருந்து விடுபடலாம் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.

இந்தியாவின் முதல் பெண் சிபிஐ இயக்குநராவாரா ரீனா மித்ரா?

ரீனா மித்ரா, 1983-ம் வருடத்தில் ஐபிஎஸ் அலுவலராகத் தேர்வானவர். தற்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக உள்ளார். ஏற்கெனவே, சிபிஐ சூப்பரின்டென்டென்ட் ஆக ஐந்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். சிறப்பான சேவைக்காக குடியரசுத்தலைவரின் காவலர் பதக்கத்தைப் பெற்றுள்ளார். 50-வது சுதந்திர தினப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததால், சிபிஐ இயக்குநராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.