Published:Updated:

மக்கள் நலன்... உறுப்பினராக அவசியமில்லை... மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு

மக்கள் நலன்... உறுப்பினராக அவசியமில்லை... மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு
மக்கள் நலன்... உறுப்பினராக அவசியமில்லை... மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு

விரைவில் நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுத் தாக்கல் செய்வோர்களுக்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இத்தகைய சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் அதுகுறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். கட்சியில் உறுப்பினராக இல்லாவிடினும், புதிய தமிழகத்தை உருவாக்க விரும்பும் யார் வேண்டுமென்றாலும்,  ரூ.10,000 செலுத்தி மக்கள் நீதி மய்யத்தில் விருப்ப மனு பெறலாம் எனும்படி வரைவு செய்யப்பட்டிருக்கிறது.  

இன்று முதல், வருகின்ற 7-ம் தேதி வரை சென்னை மற்றும் பொள்ளாச்சி அலுவலகங்களில் விருப்ப மனு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. தங்களால் போட்டியிட விருப்பமில்லை எனினும், தங்களுடைய பகுதியில் உள்ள தகுதியான நபரையும் சிபாரிசு செய்யலாம் எனவும், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கட்சிகளின் கூட்டணி பற்றிய தகவல்கள் நாளுக்குநாள் உறுதியாகிவருகிற சூழலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி வைப்பார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. கமல்ஹாசன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதாய் இருந்தாலும் அது யாருடன் அமையும் என்பது எளிதில் யூகிக்க முடியாததாகவே இருக்கிறது.