Published:Updated:

`திருடினாலோ, ஏமாற்றினாலோ சிக்கிக்கொள்வீங்க!'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்

`திருடினாலோ, ஏமாற்றினாலோ சிக்கிக்கொள்வீங்க!'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்
`திருடினாலோ, ஏமாற்றினாலோ சிக்கிக்கொள்வீங்க!'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்

சென்னை மாநகராட்சியில் இன்று முதல் சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

`திருடினாலோ, ஏமாற்றினாலோ சிக்கிக்கொள்வீங்க!'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்

Representational Image


இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் மிதிவண்டிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் சைக்கிள் இல்லாத வீடுகளைப் பார்க்க முடியாது. ஆனால் இன்றோ உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் செய்து கொண்டிருக்கின்றனர். அதே போன்று அன்றைய காலகட்டத்தில் வாடகை சைக்கிள் முறை இருந்தது. செந்தில் கவுண்டமணி படங்களில் வாடகை சைக்கிள் கடை காட்சிகளைக் கடந்து வந்திருப்போம். ஆனால், இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே இந்த வாடகை சைக்கிள் கடைகளைப் பார்க்க முடிகிறது. மறைந்துபோன வாடகை சைக்கிள் கடைகள் இனி மீண்டும் துளிர்க்கலாம். தமிழக அரசு சென்னை மாநகராட்சியில் சைக்கிள் ஷேரிங் என்னும் பெயரில் வாடகை சைக்கிள் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மக்களிடையே சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை அதிகரித்து சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத சைக்கிளின் பயன்பாட்டை அதிகரிக்கவே இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது.

`திருடினாலோ, ஏமாற்றினாலோ சிக்கிக்கொள்வீங்க!'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்


கடந்த ஜனவரி மாதம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. சைக்கிள் சேரிங் திட்டத்தைச் செயல்படுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் நிறுவனத்துடன் தமிழக அரசு கைகோத்தது. இந்நிறுவனம் ஏற்கெனவே ஹைதராபாத், டெல்லி, அமராவதி உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக அண்ணாநகர், பெசன்ட் நகர், மெரினா கடற்கரை ஆகிய மூன்று இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை மக்களின் குறைந்த தூரப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், பெசன்ட் நகர், மெரினா கடற்கரை ஆகிய மூன்று இடங்களில் 250 சைக்கிள் இயக்கப்பட உள்ளன. அதற்கேற்றவாறு சைக்கிள் நிறுத்தங்களும் அதற்கான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

வாடகை சைக்கிள் திட்டம் செயல்படும் முறை!

சென்ட்ரல், மெரினா, பெசன்ட்நகர், அடையாறு, அண்ணாநகர் உட்பட சென்னை முழுவதும் 375 சைக்கிள் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றிக்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 5000 சைக்கிள்கள் இயக்கத்துக்கு வர உள்ளன. சைக்கிளின் வடிவமைப்பின்படி ஒருவர் மட்டுமே ஓட்ட முடியும். மேலும் அனைத்து சைக்கிள்களிலும் எல்.இ.டி விளக்குகள் உள்ளன. வேகமாக ஓட்டுவதற்கு ஏதுவாக மூன்று கியர்களும் உள்ளன.

`திருடினாலோ, ஏமாற்றினாலோ சிக்கிக்கொள்வீங்க!'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்

சைக்கிளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் சைக்கிள்களைத் திருடவோ, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றவோ முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம் சைக்கிள் பயணிகளுக்கு வசதியாகச் சாலைகளில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாதையில் பச்சை நிறத்தில் சைக்கிள் பாதை என்றும் எழுதப்பட்டிருக்கும். இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட சைக்கிள் ஷேரிங் திட்டத்தில் ஹலைட் அதன் கட்டணம்தான். ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் செலுத்தினால் போதும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில், ஸ்மார்ட் பைக் என்ற செயலியை டவுன்லோடு செய்து, தங்களுடைய வங்கி விவரங்களை இணைத்துப் பதிவுசெய்ய வேண்டும். சைக்கிள் தேவைப்படும்போது அந்தச் செயலியில் பதிவு செய்து, அருகில் உள்ள சைக்கிள் நிலையத்திலிருந்து சைக்கிளை எடுத்துச்செல்லலாம். அந்த சைக்கிளை  சென்னையில் உள்ள எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் விட்டுச்செல்லலாம்.
 

நவீன வாடகை சைக்கிள் திட்டத்தைப் பற்றிய தங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்!