Published:Updated:

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?
ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

ராகுல் காந்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டம் நடைமுறையில் செயல்படுத்தத் தக்கதுதான் என்றாலும், அது தொழிலாளர்கள் சந்தையில் பெரிய தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி, அதனால் வயல்கள் உட்பட பல இடங்களில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இதனால் வேலையாட்களின் கூலி அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அதிரடி அறிவிப்பு, அரசியல் வட்டாரங்களில் ஒருபுறம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், அரசு கஜானாவுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, `விவசாயிகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் ஒரு நாளுக்கு 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல்’ எனக் கூறியிருந்தார்.

 5 கோடி குடும்பங்கள்... 25 கோடி பேருக்குப் பயன்

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திங்களன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தத் திட்டத்துக்கு `நயாயா’ எனப் பெயர் வைத்துள்ள ராகுல் காந்தி, ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 12,000 வருமானத்தை உறுதிசெய்யும் இத்திட்டம் மூலம் நாட்டின் 20% மக்கள் பயன்பெறுவார்கள் என்றும்,  மாதம் 6,000 ரூபாய் சம்பாதிக்கும் குடும்பத்துக்கு அரசு சார்பில் மீதி 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் போடப்படும் என்றும் தெரிவித்தார். 

இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் மற்றும் 25 கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பலன் அடைவார்கள் என்றும், உலகில் எந்த மூலையிலும் இதைப்போன்ற திட்டத்தை செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறிய அவர், வறுமை ஒழிப்புக்கான இறுதிக்கட்ட நடவடிக்கை தொடங்கி விட்டதாகவும், தமது கட்சி நாட்டிலிருந்து வறுமையை அடியோடு ஒழித்துக்கட்டும் என்றும் கூறியிருந்தார். 

ராகுலின் இந்த அறிவிப்பு அரசியல், குறிப்பாக பா.ஜ.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வழங்கும் மோடி அரசின் திட்டமே தேர்தலுக்காகக்  கொண்டு வரப்பட்டதுதான் என்ற விமர்சனம் எழுந்தபோதிலும், இதன் மூலம் விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற பா.ஜ.க-வின் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது. 

ஆண்டுச் செலவு ரூ. 3,60,000 கோடி 

அதே சமயம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தால் அரசு கஜானாவுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவது மட்டுமல்லாது, பட்ஜெட்டில் ஒரு நிதி ஒழுக்கம் இல்லாத நிலையும் ஏற்பட்டுவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

ராகுல்  காந்தி அறிவிப்பின்படி, தினசரி கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், இந்த `நயாயா’ திட்டம் மூலம் பயன்பெறும் குடும்பங்களுக்குத் தினமும் 202 ரூபாய் கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 72,000 ரூபாய். மொத்தம் 5 கோடி குடும்பம் என வைத்துக் கொண்டால், ஆண்டுக்கு 3.5 ட்ரில்லியன், அதாவது 3,60,000 கோடி ரூபாய் செலவு ஆகும். 

இது அரசுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்திவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, இதைச் செயல்படுத்துவது நடைமுறையில் எந்த அளவுக்குச் சாத்தியம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலின் இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, `இது தேர்தலுக்கான பம்மாத்து அறிவிப்பு’ எனச் சாடியுள்ளார். 

``2008-ல் ரூ.72,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தனர். ஆனால், 52,000 கோடி ரூபாயை மட்டும்தான் தள்ளுபடி செய்தனர். ராகுல் காந்தி அறிவித்ததைவிட 1.5 மடங்கு அதிகமாக மோடி அரசு ஏழைகளுக்கு நன்மை செய்துள்ளது’’ என ஜெட்லி  கூறியுள்ளார். 

முந்தைய வாக்குறுதிகளின் கதி இதற்கும் ஏற்படுமா?  

``காங்கிரஸ் கட்சிக்கு இதுபோன்ற வறுமை ஒழிப்புத் திட்ட அறிவிப்புகள் புதிதல்ல. 1971-ம் ஆண்டு இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட `கரீபி கட்டாவ்’ என்ற வாக்குறுதி வெகு பிரசித்தம். ஆனால், வறுமைதான் இன்னும் ஒழிந்தபாடில்லை. அதேபோன்று 2008-ல் அறிவிக்கப்பட்ட `ஒன் ரேங்க் ஒன் பென்சன்’ திட்டம், 2013-ல் அறிவிக்கப்பட்ட உணவு பாதுகாப்புத் திட்டம் போன்ற தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட எதுவுமே காங்கிரஸ் கட்சியால் நிறைவேற்றப்படவில்லை. ராகுலின் தற்போதைய வாக்குறுதிக்கும் அந்தக் கதிதான் ஏற்படும்’’ என்று கூறுகிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்.  

மேலும், ``ஒருவேளை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அது பட்ஜெட்டில் ஒரு நிதி ஒழுங்கீனத்தை ஏற்படுத்தி விடுவதோடு, பணி செய்வதற்கு எதிரான மன நிலையையும் அது ஏற்படுத்திவிடும் என்பதால், இதை ஒருபோதும் அமல்படுத்த முடியாது. 

இந்தக் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்துக்கான செலவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜிடிபி) 2 சதவிகிதமாகவும்,  பட்ஜெட்டில் 13 சதவிகிதமாகவும் இருக்கும் என்பதால், மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்’’ என்றும் கூறியுள்ளார். 

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

`செயல்படுத்துவது சாத்தியமானதே’

ஆனால், பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே, தமது கட்சி இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், இது செயல்படுத்தத்தக்க திட்டம்தான் என்றும், பட்ஜெட்டுக்கு ஏற்ற நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

``இந்தியாவில் மேல்தட்டு மக்கள் எப்பொழுதுமே ஏழைகளை மிக மோசமாகவே நடத்துகின்றனர். இந்தியா, சாதி மோதல் அரசியலிலிருந்து வருவாய் மற்றும் நலத்திட்டங்களை வழங்கும் அரசியலுக்குள் நுழைய இதுவே சரியான தருணம். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது’’ என்று கூறுகிறார், காங்கிரஸ் கட்சியின் இந்தத் தேர்தல் வாக்குறுதியைத்  தயாரித்துக் கொடுத்ததில் உதவிய பிரபல பிரான்ஸ் பொருளாதர நிபுணரான தாமஸ் பிக்கெட்டி. 

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் வழங்கும் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் எனக் கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அப்போதிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் உதவி வந்ததை தாமஸ் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், ``பொதுவாகவே வருவாயை அதிகரிப்பதில் பெருமளவிலான பண பரிமாற்றத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே சமயம் இதுபோன்றத் திட்டங்கள் நீடித்து நிலைக்க வேண்டுமெனில், அவற்றை மிகுந்த கவனமுடன் தயாரிக்க வேண்டும். அத்துடன் தற்போது அளிக்கப்படும் உணவு மற்றும் எரிபொருளுக்கான மானியங்களையும் இந்தத் திட்டத்தில் சேர்த்துவிட வேண்டும்’’ எனக் கூறுகிறார் பிரபல தனியார் வங்கி ஒன்றின் நிரந்தர வருவாய் குறித்த ஆராய்ச்சி பிரிவின் தலைவர் பிரசன்னா. 

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

`கூலி அதிகரிக்கும்... வேலையாட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும்’

இந்த நிலையில், குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டம் நடைமுறையில் செயல்படுத்தத் தக்கதுதான் என்றாலும், அது தொழிலாளர்கள் சந்தையில் பெரிய தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி, அதனால் வயல்கள் உட்பட பல இடங்களில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இதனால் வேலையாட்களின் கூலி அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

``மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தால் எப்படி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாய வேலைகளுக்கான ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டதோ அதேபோன்ற நிலை இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாலும் ஏற்படலாம். இதனால், கூலி வேலையாட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால் கூலி அதிகரிக்கும்’’ என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

பயனாளிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்

இதனிடையே, ``ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த `நயாயா’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள முதன்மை சிக்கலே உண்மையான பயனாளிகள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் உள்ளது. ஏனெனில், இந்தியாவில் மக்களின் வருவாய் குறித்த தகவல் திரட்டப்படுவதில்லை. வீட்டு நுகர்வு செலவினம் தொடர்பாக தேசிய மாதிரி ஆய்வு மையம் ( National Sample Survey Organisation -NSSO) சேகரித்த தகவலின் அடிப்படையில்தான்வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் யார் என்பதை அரசு இதுவரை தீர்மானித்து வருகிறது. இப்படியான நிலைமையில், இதுபோன்ற பெரும் பணபரிமாற்றம் உடைய இதுபோன்ற திட்டங்களைப் பல சுயநல சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்ற பல அரசு திட்டங்கள் எவ்வாறு தவறானவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டதோ, அதேபோன்றே இந்தத் திட்டமும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது’’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏழைகளுக்கு ரூ.6,000... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி... விவசாய வேலைக்கு வேட்டு வைக்குமா?

அதே சமயம், ``ரேஷன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் வழங்குவது போன்று அல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலகக் கணக்குக்கே நேரடியாகப் பணத்தைச் செலுத்தும் இந்த வருவாய் உத்தரவாதத் திட்டம், செயல்படுத்தத்தக்க திட்டம்தான் என்றும், இதனால், கமிஷன் போன்று எதுவும் யாராலும் எடுத்துக்கொள்ளப்படாமல் முழுத் தொகையும் பயனாளிகளுக்குக் கிடைக்கும். 

ஆனால், பயனாளிகள் குறித்த துல்லியமான கணக்கெடுப்பை முடிக்கக் கால அவகாசம் பிடிக்கும் என்பதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த குறைந்தது மூன்றாண்டுகளாகவது ஆகிவிடும்’’ என்கிறார் பிரபல சமூகவியலாளர் சரத் தவாலா. 

எந்த ஒரு திட்டமும் உண்மையான பயனாளிகளுக்குப் பயனளித்தால் சரிதான்!

அடுத்த கட்டுரைக்கு