Published:Updated:

”ஆங்கில வெறுப்பா, இந்தி-சமஸ்கிருத திணிப்பா?” - மும்மொழிக் கொள்கை குறித்து பி.டி.ஆர் தியாகராஜன்

”ஆங்கில வெறுப்பா, இந்தி-சமஸ்கிருத திணிப்பா?” - மும்மொழிக் கொள்கை குறித்து பி.டி.ஆர் தியாகராஜன்
”ஆங்கில வெறுப்பா, இந்தி-சமஸ்கிருத திணிப்பா?” - மும்மொழிக் கொள்கை குறித்து பி.டி.ஆர் தியாகராஜன்

”ஆங்கில வெறுப்பா, இந்தி-சமஸ்கிருத திணிப்பா?” - மும்மொழிக் கொள்கை குறித்து பி.டி.ஆர் தியாகராஜன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்தூரி ரங்கன் கமிட்டியின் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை, இந்திய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழக அளவில் பல்வேறு தரப்பிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முக்கியமாகக் கல்வியில் மும்மொழிக் கொள்கை என்று குறிப்பிடப்பட்டிருந்தது வலுத்த எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. மத்திய மதுரை தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி மற்றும் ஆங்கில எதிர்ப்பு அம்சங்கள் குறித்த தன்னுடைய கருத்துகள் சிலவற்றை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் கூறுகையில், "கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருப்பவை அனைத்துமே ஒன்றோடு ஒன்று முரண்பட்டு இருக்கின்றன. பாடத்திட்டத்தில் தேவையில்லாதவற்றை நீக்கி தேவையானதை சேர்க்க வேண்டும். அதில் ஆழ்ந்து படிப்பது, மாணவர்களின் திறனாய்வை வளர்க்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கல்வியில் கலை, கைவினை உருவாக்கக் கல்வி உள்ளிட்டவை பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட கல்வியாக இல்லாமல் பாடத்திட்டமாகவே சேர்க்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். தொழில்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை அத்தனையுமே வரவேற்கத்தகுந்த அம்சம்தான். தாய்மொழி வழியில் கற்பிக்கப்படும் எதுவும்

”ஆங்கில வெறுப்பா, இந்தி-சமஸ்கிருத திணிப்பா?” - மும்மொழிக் கொள்கை குறித்து பி.டி.ஆர் தியாகராஜன்

பிள்ளைகளுக்குப் புரியும் என்கிறார்கள். ஒரு மனோதத்துவ நிபுணராக நானும் அதை ஆமோதிக்கிறேன். இதையடுத்துதான் சிக்கல் வருகிறது.

'குழந்தைப்பருவத்தில் மொழிகளைப் பிள்ளைகளுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்கலாம்' என்று கூறியிருக்கிறார்கள். அது எல்லா மொழிகளுக்கும் பொருந்தாது. மதுரையில் ஒரு கிராமத்தில் இருக்கும் குழந்தைக்கு, லத்தீன் மொழியைக் கற்பிப்பது சாத்தியமில்லாதது. ஆனால் தமிழும், ஆங்கிலமும் எளிதில் கற்க முடியும். ஏனென்றால் அந்தக் குழந்தையைச் சுற்றி இருக்கும் சூழலில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் மொழியாக அவை இரண்டும் இருக்கும். அதேபோல மூன்று மொழிகள் கற்பதைக் கட்டாயம் என்கிறார்கள். பாடத்திட்டத்தைப் பிள்ளைகளுக்குக் குறைப்பதாகச் சொல்லிவிட்டு மூன்று மொழிகளைக் கற்பதைக் கட்டாயமாக்குவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?. இதற்கான விளக்கத்தை அதற்கடுத்த பகுதிகளில் பார்க்கலாம். ஆங்கிலம் மக்களிடையே ஒற்றுமையைப் பிரித்துவிட்டதாகவும், தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளே தங்களது தாய்மொழியை கல்விமொழியாகப் பின்பற்றுகிறது. ஆனால், நமது தேசத்தில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே பேசப்படும் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று குறிப்பிட்டு, ஆங்கில மொழியை வில்லன் போலச் சித்தரிக்கிறார்கள். ஆங்கிலத்தை வில்லனாக்குவது இந்தியை நாயகனாக்கி அப்படியே சமஸ்கிருதத்தை நுழைக்கத்தான். சென்னைக்குள்ளேயே ஆங்கிலம் பேசுபவர்கள் 15 சதவிகிதத்துக்கு மேல் இருப்பார்கள் என என்னால் அழுத்தமாகச் சொல்ல முடியும். அப்படியிருக்க, தேசிய அளவில் குறைவான சதவிகிதம்தான் ஆங்கிலம் பேசப்படுகிறது என்கிறார்கள்.

ஆங்கில மொழிக்கு அத்தனை வலிமை இல்லையென்றால் அறிக்கையை மட்டும் ஏன் ஆங்கிலத்திலேயே வெளியிட வேண்டும். இந்தியிலேயே வெளியிட்டிருக்கலாமே?. இத்தனை கண்மூடித்தனமான கருத்துகளை வல்லுநர் என்கிற பெயரில் எப்படி வெளியிடத் துணிந்தார்கள்?. இந்தியைக் கட்டாயமாக்குவதற்கு மட்டுமே இத்தனையும். அண்ணா சொன்னதைத்தான் நானும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். பெருவாரியான மக்கள் பேசுவதை தேசிய மொழியாகக் கருதவேண்டும் என்றால் பெருவாரியாக எல்லோர் வீட்டிலும் தென்படும் எலிதான் தேசிய விலங்காக இருக்கவேண்டும். அரிதான புலி எப்படி தேசிய விலங்கானது, காக்கைதான் தேசியப் பறவையாக இருக்கவேண்டும். மயில் எப்படி தேசியப் பறவையானது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

புதிய வரைவு கல்விக் கொள்கை குறித்தான பொதுமக்கள் கருத்துக்கு கால அவகாசத்தை நீட்டிக்கச் சொல்லி, தமிழகக் கல்வியியல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு