Published:Updated:

‘10 ரூபாய் நாணயத்தை தவிர்க்கவும்!’ - சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் போக்குவரத்து பணிமனை

‘10 ரூபாய் நாணயத்தை தவிர்க்கவும்!’ - சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் போக்குவரத்து பணிமனை
‘10 ரூபாய் நாணயத்தை தவிர்க்கவும்!’ - சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் போக்குவரத்து பணிமனை

‘10 ரூபாய் நாணயத்தை தவிர்க்கவும்!’ - சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் போக்குவரத்து பணிமனை

“பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி நடத்துநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால்  திருப்பூர் போக்குவரத்து பணிமனை நிர்வாகம் அதை வாபஸ் பெற்றுள்ளது."

‘10 ரூபாய் நாணயத்தை தவிர்க்கவும்!’ - சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் போக்குவரத்து பணிமனை

இந்திய ரிசர்வ் வங்கி, தனது பவளவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், கடந்த 2011-ம் ஆண்டு புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. என்ன நேரத்தில் வெளியிடப்பட்டதோ தெரியவில்லை, அவ்வப்போது,  எங்கேயாவது ’10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என்ற புரளி கிளம்பி மக்களை பாடாய்ப் படுத்தி எடுக்கிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட  சமயத்தில்,  ‘இனி...10 ரூபாய் நாணயங்களும் செல்லாது’ எனச் சமூக வலைதளங்களில் யாரோ புரளியைக் கிளப்பிவிட.... அது பொதுமக்கள் மத்தியில் காட்டுத் தீயாக பரவியது.

அந்தப் புரளிக்கு வலுசேர்க்கும் வகையில் அரசுப் பேருந்துகள் தொடங்கி அரசின் பல்வேறு துறைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தார்கள். சில வங்கிகளும் தெளிவான காரணங்களைச் சொல்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் புறக்கணித்தன. இது பொதுமக்கள் மத்தியில்  பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்றும், நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டு கடுமை காட்டியது. இவ்வளவுக்குப் பிறகும், திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 10 ரூபாய் நாணயம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது  

கடந்த 21-ம் தேதி, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில், `பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை முடிந்தவரைத் தவிர்க்கவும். தவறும்பட்சத்தில் வழித்தடத்தில் பணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும்போது, 10 ரூபாய் நாணயத்தைத் தவிர்க்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது'  என்று சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது. இதை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர... 10 ரூபாய் நாணயங்களை வாங்கக் கூடாது என்று உத்தரவு போட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று பலரும் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.   

இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டது. இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபால், ``வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவே அந்த சுற்றறிக்கை ஒட்டப்பட்டது. ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக  அது பொதுமக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அந்த சுற்றறிக்கை  திரும்பப் பெறப்பட்டது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு