Election bannerElection banner
Published:Updated:

பசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம்! - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்

மத்தியப்பிரதேசத்தின் ஆளும் காங்கிரஸ் அரசு, நாட்டிலேயே முதன்முறையாகப் பசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவரும் என அறிவித்துள்ளது.

பசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம்! - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்

பசுவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அறிவித்திருக்கும் அரசு, பசுப் பாதுகாவல் என்ற பெயரில் முதன்முறை வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மூன்றாண்டுச் சிறையும் அடுத்தடுத்த முறை வன்முறையில் ஈடுபடுபவர்கள் அல்லது பொருள்சேதம் விளைவிப்பவர்களுக்கு ஐந்தாண்டுச் சிறை எனவும் சட்டத்திருத்தம் கொண்டுவர இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம், இன்று கூடவிருக்கும் கேபினட்டில் நிறைவேற்றப்படும் என மத்தியப் பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018 ஜூலை மாதத்தில் பசுவதை தடுப்புச் சட்ட மசோதா மீதான வழக்கில் கருத்து கூறிய உச்ச நீதிமன்றம், `சட்டத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் தனிநபர்கள் வன்முறையைக் கையில் ஏந்துவது பொறுத்துக்கொள்ள முடியாதது. ஆகவே, பசுவதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்தத் தொடர் வன்முறைகள் மீதும் அரசு சட்டரீதியான நடவடிக்கைகளைக் கொண்டுவர வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தது. கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றபிறகு, மத்தியப்பிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக பசுப் பாதுகாவலர்களின் வன்முறை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு