Published:Updated:

ஒசாமா மரணம்.. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மைல்கல்: இந்தியா கருத்து

Vikatan Correspondent

புதுடெல்லி, மே 2,2011

அல்-காய்தா இயக்க நிறுவனத் தலைவர் ஒசாமா பின் லேடனின் மரணம், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மைல்கல் நிகழ்வு என்று இந்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. ##~~##

அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா கொல்லப்பட்டதாக யு.எஸ்.அதிபர் ஒபாமா அறிவித்தார். (செய்தி: ஒசாமா பின் லேடன் மரணம்)

இதுகுறித்து கருத்து தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'பாகிஸ்தானின் உள்பகுதியில் நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.

இது, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், வெற்றிகரமான மைல்கல் நிகழ்வுமாகும்.

கடந்த ஆண்டுகளில் பயங்கரவாத குழுக்களின் பிடிக்கு, ஆயிரணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

நமது அண்டை நாடுகளில் விரவியுள்ள பயங்கரவாதிகளையும், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள பயங்கரவாதத்துக்கும் எதிராக உலகம் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் இத்துடன் நின்றுவிடக் கூடாது. இந்தப் போராட்டம் கண்டிப்பாக தொடர வேண்டும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.