Published:Updated:

நாள் 8.. AI விமானிகள் ஸ்டிரைக்; 221 விமானங்கள் ரத்து

Vikatan Correspondent

புதுடெல்லி, மே 4,2011

ஏர் இந்தியா விமானிகள் 8-வது நாளாக வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இன்று 221 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ##~~##

உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் 1,600 பேர் கடந்த ஏழு நாள்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

முன்னதாக, விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு நடத்த சித்தார்த் லுத்ரா என்பவரை மத்தியஸ்தராக டெல்லி உயர் நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது.

விமானிகள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வரும் 9 விமானிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. அஹமது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த நோட்டீஸுக்கு இரண்டு வார காலத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.