Published:Updated:

மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்!

Vikatan Correspondent
மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்!

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்கு பின் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.

நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களவையில் கடந்த 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

##~~##
சுமார் 6 மணி நேர விவாதத்திற்கு பின் நள்ளிரவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகி இருந்தது.