Published:Updated:

லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்: ஹசாரே

லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்:   ஹசாரே
லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்: ஹசாரே
லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்:   ஹசாரே

புதுடெல்லி: லோக்பால் மசோதாவை நிறை வேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு ஹசாரே எழுதியுள்ள கடிதத்தில்,"ஊழலுக்கு எதிரான லோக்பால்  மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். என்று நான்  கோரிக்கை விடுத்தேன்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி  டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தேன். பிரதமரின் உறுதிமொழியை  ஏற்று எனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால் 2 வருடங்கள் ஆகியும் அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

##~~##
பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை  கூட்டி ஊழலுக்கு  எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஊழலை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்த மசோதாவை சிறப்பு கூட்டத்தில்  நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் மீண்டும் டெல்லி ராம்லீலா  மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பேன்" என்று கூறியுள்ளார்.