Published:Updated:

10 இடங்கள் பின்தங்கிய இந்தியா! #WEFIndex2019 #VikatanInfographics

2018-ம் வருடம், ஜி20 பொருளாதார மாநாட்டிற்குப் பிறகு, 2017-ம் ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேறி, 58-வது இடத்திலிருந்து வந்த இந்தியா, இந்த வருடம் 10 இடங்கள் பின் நகர்ந்து, 68-வது இடத்தைப் பிடித்துள்ளது.

WEF Index
WEF Index

ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகப் பொருளாதார மன்றம், சமீபத்தில் இந்த வருடத்திற்கான உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 141 நாடுகளில், பணவீக்கம், டிஜிட்டல் திறன்கள் மற்றும் வர்த்தகக் கட்டணங்கள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான குறியீடுகளில் தன் ஆய்வை மேற்கொண்டது.

World Economic Forum
World Economic Forum

1979-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகளாவிய போட்டித்திறன் குறியீடு (G.C.I), 141 நாடுகளில் 103 குறியீடுகள் மூலம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒழுங்கமைத்துவருகிறது. இந்த ஆய்வில் நிறுவனங்கள், மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சுகாதாரம் உட்பட 12 குறியீடுகள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு முதலிடத்திலிருந்த அமெரிக்கா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், "அமெரிக்கா கண்டுபிடிப்பு அதிகார மையமாக உள்ளது" என்று ஆய்வறிக்கையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். திறமையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது மற்றும் துணிகர மூலதனம் கிடைக்கும் தன்மை உள்ளிட்ட பல துணைப்பிரிவுகளில் அமெரிக்கா உலகிலேயே அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

US President Donald Trump
US President Donald Trump
weforum
நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா?#SmartInvestorIn100Days
- நாள் 1

அதோடு, வேறெந்த நாடும் பெற்றிடாத அளவு மதிப்பெண்ணை வணிக இயக்கத் தூண் பிரிவில் பெற்றுள்ளது. இருப்பினும், அதிகரித்துவரும் வர்த்தகக் கட்டணங்கள், ஆயுட்காலம் குறைந்து வருவது மற்றும் அமெரிக்க மக்களிடையே குறைந்த டிஜிட்டல் திறன்கள் ஆகியவை, அமெரிக்காவின் ஒட்டுமொத்த தரவரிசையில் பாதிப்பை ஏற்படுத்தி 83.7 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர், அதன் பொதுத்துறை, தொழிலாளர் சக்தி, பன்முகத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு அதிக மதிப்பெண் பெற்றது. மேலும், ஆயுட்கால அடிப்படையில், பட்டியலில் 84.8 மதிப்பெண்களுடன் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Singapore
Singapore

அதைத் தொடர்ந்து, ஹாங்காங் மூன்றாவது இடத்தையும், நெதர்லாந்து 82.4 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தையும், 82.3 மதிப்பெண்களுடன் சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில், முதல் மற்றும் கடைசி 5 இடங்களைப் பிடித்த நாடுகளையும், இந்தியா உட்பட மற்ற சில நாடுகள் பிடித்துள்ள இடங்களையும் பின்வரும் படத்தில் காணலாம்.

10 இடங்கள் பின்தங்கிய இந்தியா! #WEFIndex2019 #VikatanInfographics

கடந்த வருடம், ஜி20 பொருளாதார மாநாட்டிற்குப் பிறகு, 2017-ம் ஆண்டைவிட ஐந்து இடங்கள் முன்னேறி, 58-வது இடத்திலிருந்து வந்த இந்தியா, இந்த வருடம் 10 இடங்கள் பின் நகர்ந்து 68-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியப் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சந்தை அளவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவின் தரவரிசை அதிகமாக உள்ளது. ஆனால், வங்கி முறை அதிக குற்றவியல் வீதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கார்ப்பரேட் நிர்வாகத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் தரவரிசை 15-வது இடத்தில் உள்ளது. மற்றும் பங்குதாரர் நிர்வாகத்தில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சந்தை அளவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒழுங்குமுறை ஆகியவற்றில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதென்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Prime Minister Modi
Indian Prime Minister Modi
பொருளாதார மந்தநிலை... மோடி அரசுதான் காரணமா?

இந்தியாவில், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் பலவீனமாக உள்ளதென்றும், மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் குறைந்த ஆயுட்காலம் ஆகியவை போட்டித்தன்மையின் அடிப்படையில் இந்தியா குறைந்த இடத்தில் இருப்பதற்கான பிற முக்கியக் காரணங்களாக உள்ளது.

தகுதி மற்றும் ஊக்கத்தொகை அடிப்படையில், இந்தியா 118-வது இடத்திலும், திறன்களுக்கான 107-வது இடத்திலும் உள்ளது. இந்தியா, தனது திறன் தளத்தை வளர்த்துக்கொள்ளவும், வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தையை விடுவிக்கவும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பின் பற்றாக்குறை, போதிய அளவில் வளர்ந்த சுறுசுறுப்பான தொழிலாளர் சந்தை, மற்றும் பெண்களின் குறைவான பங்கேற்பு ஆகியவை இந்தியாவின் போட்டித்திறன் தரவரிசையைப் பாதித்துள்ளது என்பதையும் நாம் தெரிந்துகொள்கிறோம்.

141-ல் 109!
ஆரோக்கியமான ஆயுட்காலம் பட்டியலில் 141 நாடுகளில் இந்தியா 109-வது இடத்தில் உள்ளது.

நரேந்திர மோடி அரசின் திறன் இந்தியா திட்டம், கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த வீரியத்துடன் செயல்பட்டுவருகிறது என்று கூறிவந்தாலும், திறன் தரவரிசையில் 107-வது இடத்தைத்தான் இந்தியா பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (51.4) 110-வது இடத்திலும், சீனா (73.9) 28-வது இடத்திலும், இலங்கை (57.1) 84-வது இடத்திலும், இந்தோனேஷியா (64.6) 50-வது இடத்திலும், பங்களாதேஷ் (52.1) 105-வது இடத்திலும், நேபாளம்(51.6) 108-வது இடத்திலும், மலேசியா (74.6) 27-வது இடத்திலும் உள்ளன.

WEF Index
WEF Index

அதேபோல், 141 நாடுகளின் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களைப் பின்வரும் நாடுகள் பிடித்துள்ளன. சாட் (35.1) 141-வது இடத்திலும், ஏமன் (35.5) 140-வது இடத்திலும், காங்கோ (36.1) 139-வது இடத்திலும், ஹெய்டி (36.3) 138-வது இடத்திலும், மொசாம்பிக் (38.1) 137-வது இடத்திலும் உள்ளன.