Published:Updated:

பெட்ரோல் விலையை குறைக்க கேரள CM சாண்டி முடிவு

விகடன் விமர்சனக்குழு

திருவனந்தபுரம், மே 19,2011

பெட்ரோல் விலையை குறைக்க வழிவகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கேரளாவில் முதல்வராக பதவியேற்றுள்ள உம்மன் சாண்டி தெரிவித்தார். ##~~##

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள முதல்வராக உம்மன் சாண்டி நேற்று பதவியேற்றார்.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, மாநில அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் உம்மன் சாண்டி நேற்றிரவு கூட்டினார்.

இதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறுகையில், "பெட்ரோல் விலையை குறைப்பதே அரசின் முதல் முடிவு. அதன்படி, பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரி குறைக்கப்படுகிறது. இதனால், கேரளாவில் பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் 22 பைசா குறையும்," என்றார்.

மேலும், "மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, எண்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லி மருந்தால் காசர்கோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழக்க முடிவு செய்யப்பட்டது," என்று கூறினார்.

அத்துடன், "மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு புதிய துறை ஒன்றை உருவாக்குவது குறித்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டது," என்றார் முதல்வர் உம்மன் சாண்டி.