Published:Updated:

லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

Vikatan Correspondent
லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!
லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!
லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

புதுடெல்லி: லோக்பால் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, விவாதமின்றி அவை  ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. கூட்டத்தொடரின் 5வது நாளான இன்றும் தனி தெலங்கானா விவகாரம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகள் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 12 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அதே சமயம் மேற்கூறிய பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.அதன் பின்னர் அவை கூடியபோதும் அதே நிலை நீடித்ததால் பிற்பகல் 3.30 மணி வரையும்,

##~~##
பின்னர்  திங்கட்கிழமை வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் லோக்பால் மசோதா மீதான விவாதம் தொடங்கப்படவே இல்லை.

மக்களவையும் ஒத்திவைப்பு

இதனிடையே எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.