Published:Updated:

ராஜஸ்தானில் இந்தியாவின் 25-வது அணு உலை!

விகடன் விமர்சனக்குழு

ஜெய்ப்பூர், ஜூலை 19,2011

இந்தியாவின் 25-வது அணு உலை, ராஜஸ்தான் மாநிலத்தில் அமையவுள்ளது. இதற்கான பணிகள் திங்கட்கிழமை தொடங்கியது. ##~~##

தலா 700 மெகாவாட் திறன் கொண்ட 4 புதிய அணு உலைகளை அமைப்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ரவாத்பாதா என்ற இடத்தில் நாட்டின் 25-வது அணு உலையை அமைக்கும் பணி திங்கட்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில் அணுசக்தி ஆணையத் தலைவர் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, இந்திய அணுசக்தி கழக தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்ரேயான்ஸ் குமார் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக அமையும் இந்த அணு உலை, ராஜஸ்தான் மாநிலத்தின் 7-வது அணு உலை ஆகும். அணு உலையை கட்டும் பணிகளை இந்திய அணுசக்தி கழகம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே, தாராபுரில் உள்ள 540 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை 2005-ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டு 10 மாதங்களுக்குள் கட்டி முடித்தது.

அதைவிட குறுகிய காலத்துக்குள் இந்த அணு உலையை கட்டி முடித்து சாதனை படைக்கப்போவதாக ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்தார்.