Published:Updated:

இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து!

இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து!
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து!
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து!

புதுடெல்லி: இந்திய கடற்படை சார்பில் விடப்பட்ட ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து 56 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விடப்பட்ட இந்த டெண்டரில் இத்தாலி நாட்டின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று இருந்தன.

இந்நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்வதாக இந்திய ராணுவ அமைச்சகம் நேற்று (14ஆம் தேதி) அறிவித்துள்ளது. இந்த முடிவு குறித்து டெண்டரில் பங்கேற்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய நிறுவனங்கள் மூலம் உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை தயாரிக்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.