Published:Updated:

அதிமுக ஆதரவு: நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்!

Vikatan Correspondent
அதிமுக ஆதரவு: நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்!
அதிமுக ஆதரவு: நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்!
அதிமுக ஆதரவு: நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்!

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து, மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு புதிய மசோதாவை தயார் செய்தது.

இதற்கு நாடு முழுதுவம் உள்ள அரசியல்கள் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், பல்வேறு திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த திருத்தங்கள் அனைத்தையும் செய்யாமல், 11 திருத்தங்கள் மட்டுமே செய்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அ.தி.மு.க. ஆதரவு

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அ.தி.மு.க. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.