Published:Updated:

சுப்பிரமணியசாமி அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்: தருண் கோகாய்

Vikatan Correspondent
சுப்பிரமணியசாமி அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்: தருண் கோகாய்
சுப்பிரமணியசாமி அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்: தருண் கோகாய்
சுப்பிரமணியசாமி அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்: தருண் கோகாய்

கவுகாத்தி: சுப்பிரமணியசாமி அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம் என்று அம்மாநில முதல்வர் தருண் கோகாய் எச்சரித்து உள்ளார்.

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, சமீபத்தில் அசாம் மாநிலத்தில் தனிப்பட்ட முறையில் பயணம் செய்தார். அப்போது அவர் ஒரு பல்கலைக் கழக விழாவில் பேசும்போது, குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். இதற்கு, பல்வேறு மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

சுப்பிரமணியசாமியின் பேச்சு குறித்து சத்ரா முக்தி சங்கிராம் சமிதி என்ற அமைப்பு அளித்த புகாரின்பேரில் அவருக்கு எதிராக கவுகாத்தி லட்டாசில் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கூறும்போது, ''சுப்பிரமணியசாமியின் கருத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்துவதாக உள்ளது. அதனால், இதுதொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

தொடர்ந்து அவர் இதுபோல் பேசினால், அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம். சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சுப்பிரமணியசாமி மீது பா.ஜ.க. ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பெரும் ஆச்சரியமாக உள்ளது?" என்றார்.