Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு
பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இது, புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நிலைப்புத் தன்மையைக் கொண்டிருப்பதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்துள்ளதாலும் இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் பேரலுக்கு 121 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 115.8 டாலராக குறைந்துள்ளது.

இதனால், பெட்ரோல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, பெட்ரோல் விலையில் ரூ.1.80 அளவில் இம்மாத தொடக்கத்தில் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.