Published:Updated:

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைப்பு

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைப்பு
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைப்பு
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைப்பு

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்பட்டது. இது, நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதில் மதிப்புக் கூட்டு வரியை கணக்கிட்டால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.35 குறைகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலைப்புத் தன்மையைக் கொண்டிருப்பதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்துள்ளதாலும் இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் பேரலுக்கு 121 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 115.8 டாலராக குறைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பெட்ரோல் விலையை குறைப்பது தொடர்பாக முடிவெடுக்க இன்று எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தின.

இதைத் தொடர்ந்து, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.85 குறைப்பது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, பெட்ரோல் விலையில் ரூ.1.83 அளவில் இம்மாத தொடக்கத்தில் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு ஒப்படைத்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காணும்போதும்,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முதல் முறையாக தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.